நீங்கள் மீன் பிரியர்களா?

veeddil enna kari enra vichaaranaiyum, marakkari enrathum  udanae appoa kadaiyila  naan paaththu kolluraen enru cholvathum naam palaril avathaaneppathunduchari, appadi meenel enna vichaesham irukkuthu endu oru ravundu poakalaam. ineyaavathu meenai chaappidum poathu, meen mudkalai keelae thookkip poaduvathai neruththunkal. naam, meen unnumpoathu meenen chathaiyai maddum unduviddu athan mullai thookki poaduvathu valakkam. aanaal inemael  appadi pannaathinka.  chaappida ilakuvaaka irukkum … Continue reading "neenkal meen piriyarkalaa?"
neenkal meen piriyarkalaa?

வீட்டில் என்ன கறி என்ற விசாரணையும், மரக்கறி என்றதும்  உடனே அப்போ கடையில  நான் பாத்து கொள்ளுறேன் என்று சொல்வதும் நாம் பலரில் அவதானிப்பதுண்டுசரி, அப்படி மீனில் என்ன விசேஷம் இருக்குது எண்டு ஒரு ரவுண்டு போகலாம்.

இனியாவது மீனை சாப்பிடும் போது, மீன் முட்களை கீழே தூக்கிப் போடுவதை நிறுத்துங்கள்.
நாம், மீன் உண்ணும்போது மீனின் சதையை மட்டும் உண்டுவிட்டு அதன் முள்ளை தூக்கி போடுவது வழக்கம்.
ஆனால் இனிமேல்  அப்படி பண்ணாதிங்க.  சாப்பிட இலகுவாக இருக்கும் மீன் முள்ளை நீங்கள் மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்க.
ஏன் இப்படி கூறுகிறோம் என்றால், மீன் முள்ளை சாப்பிட்டால்   எலும்புகள் வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.
மனிதனின் உடல் குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர்,  தானாகவே எலும்புகளில் உள்ள சத்து குறையத் தொடங்கும். குறிப்பாக பெண்களுக்கு 30 வயதை கடந்ததும் கல்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கல்சியம் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்து கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த கல்சியத்தை நாம் பெற்றுக்கொள்ள பால் அருந்துவது வழக்கம். பாலையும் விட, மீனின் எலும்புகளில்தான் கல்சியம் சத்து அதிகம் உள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆகவே மீன் முள்ளை முடிந்தளவு மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.
இந்த கல்சியச்சத்து எலும்புகளையும் பற்களையும் வலிமையாக்குவதற்கு தேவைப்படுகின்றது.
தசைகள் விரியும் திறன், இரத்தம் உறைதல், நரம்புகளுக்கு செய்திகளை கடத்துதல் போன்றவற்றிக்கு கல்சியம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
இது இப்படி இருக்க, நமது உடலில் இருக்கும் நகம், முடி, சிறுநீர், மலம், வியர்வை போன்றவற்றால் தினமும் கல்சியம் சத்து வெளியேறிக்கொண்டே இருக்கிறது.
ஆகவே, முடிந்தளவு மீன்களை உண்ணும்போது அதன் குத்தும் தன்மை இல்லாத முட்களை உண்ணாமல் விடாதீங்க.

 

Popular Post

Tips