வதந்திகளால் நொந்து போன நித்யாமோகன்

thamililum, thelunku marrum malaiyaala padankalil nadiththu varupavar nethyaa maenan. ivar merchal padaththil vijaykku jodiyaaka nadiththirunthaar. athan piraku meendum pala padankalil nadiththu varukiraar. avar anmaiyil thaneyaar naalithal onrukku paeddi aliththaar. appoathu thanathu chinemaa anuvankalai pakirnthu kondaar. avar koorukaiyil, naan kuddaiyaaka, kundaaka iruppathaaka varum vimarchanankalai poarudpaduththamaaddaen. enakku kuraikalai marakkadikkum alavukku thiramaikal irukkirathu enru nampukiraen.  ennai poaruththavaraiyil kichukichukkalai … Continue reading "vathanthikalaal nonthu poana nethyaamokan"
vathanthikalaal nonthu poana nethyaamokan
தமிழிலும், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். இவர் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது சினிமா அனுவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், நான் குட்டையாக, குண்டாக இருப்பதாக வரும் விமர்சனங்களை பொருட்படுத்தமாட்டேன். எனக்கு குறைகளை மறக்கடிக்கும் அளவுக்கு திறமைகள் இருக்கிறது என்று நம்புகிறேன்.  என்னை பொருத்தவரையில் கிசுகிசுக்களை பெரிதாக பொருட்படுத்தமாட்டேன்.
முதல் காதலில் நான் ஆழ்ந்துபோயிருந்தேன். அந்த காதல் முறிந்துபோனதும் மிகுந்த கவலைகொண்டேன். அதனால் கொஞ்ச காலம் ஆண்களையே வெறுத்தேன். அதன் பிறகு ஒரு காதலும் இல்லை. ஆனாலும் கிசுகிசு வந்து கொண்டுதான் இருக்கிறது.
தெலுங்கில் பிரபல நடிகரின் குடும்ப வாழ்க்கையில் பிரிவு ஏற்பட நான்தான் காரணம் என்றெல்லாம்கூட சொன்னார்கள். நாங்கள் இணைந்து நடித்த சினிமா அப்போது வெளியானதுதான் அதற்கு காரணம். அந்த நாட்களில் நான் மிகுந்த வேதனையை அனுபவித்தேன். யாரோடும் அதற்கு விளக்கம் சொல்லவும் நான் விரும்பவில்லை. அந்த காதல் கிசுகிசுவில் உண்மை இல்லை என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்த நடிகர் விவாகரத்து பெற்று வெகுநாட்கள் ஆகிவிட்டன. அந்த கிசுகிசு உண்மை என்றால், இதற்குள் நாங்கள் திருமணம் செய்துகொண்டிருக்கவேண்டும் என்றார்.

Popular Post

Tips