ரயிலுடன் மோதுண்ட இளம் ஜோடி மரணம்

kolumpu vellavaththai pakuthiyil naerru chanekkilamai kaalai rayiludan mothundu ilam jodiyoonru uyirilanthullathu. vellavaththai kadarkaraiyoaramaaka nadanthu vanthu, rayil paathaiyaik kadakka murpadda vaelaiyil paananthuraiyil irunthu koaddai nookki vantha rayiludan mothundathilaeyae kuriththa ilam jodi uyirilanthullanar.   ithanai rayilvae kadduppaaddaalar lakshman poanchaekaavum uruthippaduththiyullaar. ivviruvarum rayil paathaiyaik kadanthu kondiruntha poathae inthach champavam nadaiperrathaakavum avar theriviththaar. uyirilantha intha ilam jodi meekoda pakuthiyaich … Continue reading "rayiludan mothunda ilam jodi maranam"
rayiludan mothunda ilam jodi maranam
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை ரயிலுடன் மோதுண்டு இளம் ஜோடியொன்று உயிரிழந்துள்ளது. வெள்ளவத்தை கடற்கரையோரமாக நடந்து வந்து, ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில் பாணந்துறையில் இருந்து கோட்டை நோக்கி வந்த ரயிலுடன் மோதுண்டதிலேயே குறித்த இளம் ஜோடி உயிரிழந்துள்ளனர்.

  இதனை ரயில்வே கட்டுப்பாட்டாளர் லக்ஷ்மன் பொன்சேகாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்விருவரும் ரயில் பாதையைக் கடந்து கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்த இந்த இளம் ஜோடி மீகொட பகுதியைச் சேர்ந்ததெனத் தெரியவந்துள்ளது.

 

ரயிலுடன் மோதுண்டு இவ்விருவரும் அவ்விடத்தில் உயிரிழந்ததையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன் இது பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் ரயிலுடன் மோதுண்டு மிக மோசமாகச் சிதைந்து போயிருந்த இரு சடலங்களையும் களுபோவில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.

 

Popular Post

Tips