தேர்தல்! களமிறங்கும் நடிகர்கள்

thaerthal chamayam vanthaalae arachiyal kadchikal nadikarkalai kalaththil irakkuvathu valakkam. varalaaru kaanaatha thideer thideer thiruppankalai intha thaerthalil chanthiththirukkirathu thamilakam. athae chamayam thaerthal pirachchaarankalum choodupidiththirukkirathu.   chinna pulliyil thuvankiya vijayakaanth – vadivaelu pirachchanai periya poothamaaka valanthathu. vijayakaanth – vadivaelu mothal vivakaaram innum mudinthapaadillai. pukainthukonduthaan irukkirathu. vijayakaanthai ethirththu poaddiyiduvaen enru vadivaelu munpu ariviththirunthaar. entha kadchiyoadum chaeraamal chuyaedchaiyaaka poaddiyiduvaen … Continue reading "thaerthal! kalamirankum nadikarkal"
thaerthal! kalamirankum nadikarkal
தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம். வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது.

  சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல்.

  வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வரும் 23ம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். பொதுவாக திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். குறிப்பாக தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து அக்கட்சியை தோற்கடிக்க சபதம் ஏற்றுள்ளார். இதையடுத்து நடிகர் வடிவேலு இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

  அதிரடியாக தன்னை தி.மு.க வில் இணைத்துக் கொண்ட குஷ்பூ தி.மு.க.விற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபடுவார் என தெரிகிறது. அவர் எந்தெந்த நாட்களில் எங்கு பிரச்சாரம் செய்கிறார் என்ற பட்டியலும் முடிவாகிவிட்டது.

  தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி தி.மு.க.விற்கு ஆதவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னை வருகிறார்.

  திமுக களத்தில் நடிகர் வடிவேலு இறங்கிவிட்டதை அடுத்து அதிமுக களத்தில் நடிகர் விவேக்கை இறக்க முயற்சிகள் நடந்துவருகிறது. மதுரை மண்ணைச்சேர்ந்த இந்த சிரிப்பு நடிகர்கள் இருவரும் எதிர் எதிர் அணியில் நின்று சீரியசாக பேசப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

  அ.தி.மு.க தரப்பில் இப்போது சரவணன், செந்தில், பொன்னம்பலம், ஆனந்த்ராஜ் தீவிர பிரச்சாரத்தில் இறங்குகிறார்கள்.

 

இது போக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் அசன் முகமது ஜின்னா, நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளர்.

  அவர் ரஜினியை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார் என தெரிகிறது. இருப்பினும் அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் இந்த சந்திப்பு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

 

Popular Post

Tips