சில்லரை காசுகளுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்

pallaavaram thokuthikku chuyaechchai vaedpaalar ineyan jan poaddiyidukiraar. ivar, vaedpumanu thaakkal cheyvatharkaaka kalakdar aluvalakaththukku naerru mathiyam oru manekku vanthaar. vinnappaththudan daepaachid thokaiyai chillarai kaachukalai koduththaar. 5, 2, 1 roopaay ena 10,000 roopaaykkum naanayankalai oru thuneyil kaddi piriththu vaiththaar.   ithai paarththu thaerthal nadaththum athikaarikal thikaiththanar. oru manekku thodankiya chillarai kaachukalai ennum pane pirpakal 3 manekku mudinthathu. … Continue reading "chillarai kaachukaludan vantha chuyaechchai vaedpaalar"
chillarai kaachukaludan vantha chuyaechchai vaedpaalar
பல்லாவரம் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் இனியன் ஜான் போட்டியிடுகிறார். இவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் ஒரு மணிக்கு வந்தார். விண்ணப்பத்துடன் டெபாசிட் தொகையை சில்லரை காசுகளை கொடுத்தார். 5, 2, 1 ரூபாய் என 10,000 ரூபாய்க்கும் நாணயங்களை ஒரு துணியில் கட்டி பிரித்து வைத்தார்.

  இதை பார்த்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திகைத்தனர். ஒரு மணிக்கு தொடங்கிய சில்லரை காசுகளை எண்ணும் பணி பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது. இதில் 5 ரூபாய்&1000, 2 ரூபாய்&4000, 1 ரூபாய்&2000 என 10,000 ரூபாய்க்கும் நாணயங்கள் இருந்தன. சில்லரை காசு குறைந்தால் மீதியை கொடுப்பதற்கும் ஒரு பையில் நாணயங்கள் வைத்திருந்தார்.

 

35 வயதான இனியன் ஜான் கூறுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 மாதமாக நண்பர்களுடன் சேர்ந்து நாணயங்களை சேர்த்தேன். அரசியல்வாதிகளிடம் நாணயம் இல்லை. இதை தெரிந்தாவது அவர்கள், நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் கண்ணியமான பயணமும் அரசியல் மாற்றமும் ஏற்பட வேண்டும் என்றார். எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் வேட்பாளர் குமார் (26) பல்லாவரம் தொகுதிக்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர், சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் டிசைனிங் இன்ஜினியராக வேலை செய்கிறார். ஊழலை ஒழிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று குமார் கூறினார்.

 

Popular Post

Tips