பிரபல ரவுடிக்கு அரிவாள் வெட்டு

chennai aduththa neelaankarai kathiraa kaardan 2&vathu theruvil thakaraaru nadappathaaka inru kaalai neelaankarai poaleechaarukku thakaval vanthathu. poaleechaar virainthu chenru paarththapoathu anku vaalipar oruvar thalai, kaluththu, kaathu pakuthiyil vedduppadda nelaiyil raththa vellaththil mayankik kidanthaar.   avarai meeddu, adaiyaaril ulla thaneyaar maruththuvamanaiyil chaerththanar. anku theevira chikichchai alikkappaddu varukirathu.poaleechaar valakku pathinthu vichaaranai nadaththiyathil, veddappaddu kidanthavar perampoor chempiyam chokkalinkam theruvai … Continue reading "pirapala ravudikku arivaal veddu"
pirapala ravudikku arivaal veddu

சென்னை அடுத்த நீலாங்கரை கதிரா கார்டன் 2&வது தெருவில் தகராறு நடப்பதாக இன்று காலை நீலாங்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு வாலிபர் ஒருவர் தலை, கழுத்து, காது பகுதியில் வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்.

 

அவரை மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், வெட்டப்பட்டு கிடந்தவர் பெரம்பூர் செம்பியம் சொக்கலிங்கம் தெருவை சேர்ந்த உமாசங்கர் (எ) வெள்ளை உமா (36) என்பது தெரிந்தது.

 

திருமணமாகி 2 ஆண்டு ஆகிறது. மனைவி மீனா. பிரபல ரவுடியான உமாசங்கர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் மீது செம்பியம் போலீசில் 7 வழக்கு உள்ளது தெரிந்தது. முன் விரோதம் காரணமாக உமாசங்கர் வெட்டப்பட்டாரா அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Popular Post

Tips