படமாகும் நித்யானந்தா ரஞ்சிதா கதை!

chaamiyaar nethyaananthaa, nadikai rajchithaa padukkaiyarai kaadchikal daelivishanel oliparappaaki paraparappu aerpaduththina. ithil nethyaananthaa kaithaanaar. rajchithaa thalaimaraivaanaar   tharpoathu iruvarum athu unmaiyaana padamalla, kiraapiks enru maruththu varukinranar.   intha nelaiyil nethyaananthaa rajchithaa charchchaiyai maiyamaaka vaiththu kannadaththil chathyaananthaa enra peyarilum, thelunkil ai.aar.ae. enra peyarilum padam thayaaraaki varukirathu.   kannadaththil nethyaananthaa vaedaththil ravichaeththanum, thelunkil raajanthirapira chaaththum nadikkinranar. ippadaththukku nethyaananthaa … Continue reading "padamaakum nethyaananthaa rajchithaa kathai!"
padamaakum nethyaananthaa rajchithaa kathai!
சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கையறை காட்சிகள் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தின. இதில் நித்யானந்தா கைதானார். ரஞ்சிதா தலைமறைவானார்

  தற்போது இருவரும் அது உண்மையான படமல்ல, கிராபிக்ஸ் என்று மறுத்து வருகின்றனர்.

  இந்த நிலையில் நித்யானந்தா ரஞ்சிதா சர்ச்சையை மையமாக வைத்து கன்னடத்தில் சத்யானந்தா என்ற பெயரிலும், தெலுங்கில் ஐ.ஆர்.ஏ. என்ற பெயரிலும் படம் தயாராகி வருகிறது.

  கன்னடத்தில் நித்யானந்தா வேடத்தில் ரவிசேத்தனும், தெலுங்கில் ராஜேந்திரபிர சாத்தும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  என் வாழ்க்கையை படமாக்க கூடாது என்று வலியுறுத்தி கன்னடத்தில் படத்தை தயாரிக்கும் மதன் பட்டேலுக்கும், ரவிசேத் தனுக்கும் வக்கீல் கிருஷ்ண குமார் பகவதி மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  இதுபோல் தெலுங்கில் தயாராகும் படத்தை தடை செய்ய கோரி ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் மதன் பட்டேல் கூறும்போது, சத்தியானந்தா படத்தின் படப்பிடிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம்.

 

படம் முடிந்து ரிலீசாகும்போது பார்த்து அதில் ஆட்சேபனையான காட்சிகள் இருந்தால் நித்யானந்தா எதிர்க்கட்டும்.

  படம் வருவதற்கு முன்பே இது போன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி தடுக்க முயல்வதை ஏற்க முடியாது என்றார்.

  நித்யானந்தாவாக நடிக்கும் ரவிசேத்தன் கூறும் போது, இந்த படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. நித்யானந்தா வேடத்தில் நடிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

  நான் பயப்பட மாட்டேன் என்றார். இந்த படத்துக்கு ஆந்திரா, கர்நாடகாவில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

  நித்யானந்தா ஆசிரம நடவடிக்கைகள் அனைத்தும் இப்படம் மூலம் அம்பலமாகும் என்று பேசுகின்றனர். படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கிறது

  டிங் டொங் குருஜிக்கு ஜெய்...... இந்த பகுதியையும் பார்வை இடுங்கள்

 

Popular Post

Tips