சம்மட்டியால் தாக்கி விஷம் கொடுத்து மனைவி கொலை

chammaddiyaal charamaariyaaka adiththu, pin visham koduththu manaiviyai kodooramaaka kolai cheythaar kaddida maesthiri. pin avarum visham kudiththu tharkolaikku muyanrullaar. neelaankaraiyil nadantha ichchampavam appakuthiyil perum paraparappai aerpaduththi ullathu.   neelaankarai arijar annaa nakar 5vathu theruvil vachiththu varupavar sreerankan (45). kaddida maesthiri. ivarathu chontha oor sreerankam. manaivi paappaaththi. 2 makal, oru makal ullanar. thampathiyidaiyae aerpadda karuththu vaerupaadu kaaranamaaka … Continue reading "chammaddiyaal thaakki visham koduththu manaivi kolai"
chammaddiyaal thaakki visham koduththu manaivi kolai
சம்மட்டியால் சரமாரியாக அடித்து, பின் விஷம் கொடுத்து மனைவியை கொடூரமாக கொலை செய்தார் கட்டிட மேஸ்திரி. பின் அவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீலாங்கரையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நீலாங்கரை அறிஞர் அண்ணா நகர் 5வது தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீரங்கன் (45). கட்டிட மேஸ்திரி. இவரது சொந்த ஊர் ஸ்ரீரங்கம். மனைவி பாப்பாத்தி. 2 மகள், ஒரு மகள் உள்ளனர். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ¢ந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் ஆலத்தூரான்பட்டியில் மகள்கள், மகனுடன் பாப்பாத்தி வசித்து வந்தார். இந்நிலையில், தன்னுடன் சித்தாளாக வேலை பார்த்த கடலூரை சேர்ந்த சாந்தி (35) என்பவரை ஸ்ரீரங்கன் 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு சுகன்யா (17) என்ற மகள் உள்ளார்.

  ஐயப்பன் கோயிலுக்கு செல்ல ஸ்ரீரங்கன் மாலை போட்டிருந்தார். நேற்றிரவு, வீடு விற்பது தொடர்பாக ஸ்ரீரங்கன், சாந்தி இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீரங்கன், சம்மட்டி எடுத்து சாந்தியை சரமாரியாக அடித்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு காதிலிருந்து ரத்தம் வெளியேறியது. அலறி துடித்தபடி கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த மகள் சுகன்யாவையும் ஸ்ரீரங்கன் தாக்கினார்.

 

பின்னர் ஒரு பாட்டிலில் இருந்த விஷத்தை எடுத்து சாந்தியின் வாயில் ஊற்றினார். பின் அவரும் விஷத்தை குடித்தார். இருவரும் மயங்கினர். தகவல் அறிந்து நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார். ஸ்ரீரங்கன் சிகிச்சை பெற்று வருகிறார்.

  போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் தெரியவந்த தகவல்: ஸ்ரீரங்கனுக்கு திருச்சியில் 2 வீடு உள்ளது. ஒரு வீடு பாப்பாத்தி பெயரிலும், மற்றொரு வீடு சாந்தி பெயரிலும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முதல் மனைவியுடன் சமாதானம் ஏற்பட்டது.

  அதனால் அடிக்கடி திருச்சிக்கு சென்று பாப்பாத்தியையும், பிள்ளைகளையும் சந்தித்து வந்துள்ளார். இதை சாந்தி தட்டிக் கேட்க தகராறு ஏற்பட்டது. வீடு தொடர்பாக நடந்த தகராறில், 'நீங்கள் என்னுடன் இருந்தால் போதும், திருச்சியில் உள்ள எனது வீட்டைகூட பாப்பாத்தியிடம் கொடுத்து விடுங்கள்Õ என்று சாந்தி கூறியுள்ளார்.

  அதன்படி அந்த வீட்டு பத்திரத்தையும் கொடுத்து விட்டு வந்தார் ஸ்ரீரங்கன்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீலாங்கரையில் உள்ள வீட்டை விற்க வேண்டும் என்று ஸ்ரீரங்கன் கூறியிருக்கிறார். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் சாந்தியை அடித்து கொன்றுள்ளார் ஸ்ரீரங்கன். இவ்வாறு விசாரணையில் தெரிந்தது.

Popular Post

Tips