உதவிப் பேராசிரியருடன் இரவில் சுற்றியதால் வந்த வினை

thaneyaar kalloori uthavip paeraachiriyarudan iravil churriya pen ooliyar, 30 aayiram roopaay mathippilaana thankachcheyinai parikoduththaar.   ivaridam valippariyil eedupadda vaaliparai poaleechaar kaithu cheythanar. naamakkal maavaddaththaich chaernthavar chuntharraaj(26).   koavai nakarilulla peelamaedu, ellaith thoddam pakuthi vaadakai veeddil vachikkiraar.   koavai – poallaachchi chaalaiyilulla thaneyaar kallooriyil uthavip paeraachiriyaraaka paneyaarrukiraar. naerru mun thinam iravu 11.00 maneyalavil ivar, thannudan kallooriyil … Continue reading "uthavip paeraachiriyarudan iravil churriyathaal vantha vinai"
uthavip paeraachiriyarudan iravil churriyathaal vantha vinai
தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியருடன் இரவில் சுற்றிய பெண் ஊழியர், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கச்செயினை பறிகொடுத்தார்.

  இவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(26).

  கோவை நகரிலுள்ள பீளமேடு, எல்லைத் தோட்டம் பகுதி வாடகை வீட்டில் வசிக்கிறார்.

  கோவை - பொள்ளாச்சி சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். நேற்று முன் தினம் இரவு 11.00 மணியளவில் இவர், தன்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பெண் ஊழியரை எல் அண்ட் டி பை-பாஸ் ரோட்டில் பைக்கில் அழைத்துச் சென்றார்.

 

வெள்ளலூர் பிரிவு அருகே பைக்கை நிறுத்திய இருவரும் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் நடந்து சென்றனர். திடீரென வழிமறித்த ஆசாமி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி, பெண் ஊழியரின் கழுத்திலிருந்த இரண்டு சவரன் தங்கச் செயின் மற்றும் மொபைல் போனை பறித்தார்.

  எதேச்சையாக அப்பகுதியில் ரோந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து எஸ்.ஐ., ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், வழிப்பறி நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

  விசாரணையில் அந்நபர், ஒண்டிபுதூர் அடுத்துள்ள சிந்தாமணிபுதூரைச் சேர்ந்த சசிக்குமார்(35) என, தெரியவந்தது. இவ்வாலிபர் போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது

 

Popular Post

Tips