மீன் கறி

thaevaiyaana poarudkal   meen – 500 kiraam venkaayam – 2 thakkaali – 2 puli paesd – 1/2 daepil spoon poondu – 5 pal ijchi – 1 inch cheerakam – 1 deespoon milakaay poadi – 2 deespoon majchal poadi – 1/2 deespoon pachchai milakaay – 3 thaenkaay thuruviyathu – 2 daepil spoon elumichcham chaaru – 1 … Continue reading "meen kari"
meen kari

தேவையான பொருட்கள்

 

மீன் - 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவியது - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சம் சாறு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து மீனின் மேல் பூசி தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேங்காய், பூண்டு, இஞ்சி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
பின் தக்காளி விழுதையும் போட்டு நன்கு வதக்கி, அரைத்த மசாலாவையும் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்துள்ள மீன், புளிபேஸ்ட், உப்பு போட்டு 5 நிமிடம் வேக விடவும். (அதிக நேரம் வேக விட்டால் மீன் கரைந்து விடும்).
மீன் நன்கு வெந்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Popular Post

Tips