அழகை அதிகரிக்க….

* kadalaimaa, elumichchai palachchaaru irandaiyum chaerththu mukaththil thaeyththu vanthaal enneyp pichu pichuppu neenkum. paerichcham palaththai thaenel oora vaiththu chaappiddu vanthaal udar paruman athikakkum.   * paerichcham palaththai paalil chaerththu chuda vaiththu thoonkach chellum mun parukinaal udar paruman athikarikkum.   * thaenkaayp paalai mukaththil thaeyththaal mukaththil irukkum churukkankal neenkum.   * rojappoo ithalai venneer chaerththu araiththu … Continue reading "alakai athikarikka…."
alakai athikarikka….

* கடலைமா, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய்ப் பிசு பிசுப்பு நீங்கும். பேரிச்சம் பழத்தை தேனில் ஊர வைத்து சாப்பிட்டு வந்தால் உடற் பருமன் அதிகக்கும்.

 

* பேரிச்சம் பழத்தை பாலில் சேர்த்து சுட வைத்து தூங்கச் செல்லும் முன் பருகினால் உடற் பருமன் அதிகரிக்கும்.

 

* தேங்காய்ப் பாலை முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும்.

 

* ரோஜாப்பூ இதழை வெந்நீர் சேர்த்து அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.

 

* வெந்தயம், துளசி இரண்டையும் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.

 

* வாழைப்பழத் தோலை லேசாக சூடாக்கி கண்ணின் மேல் வைக்க கருவளையம் நீங்கும்.

 

* சந்தனம், தேன் இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

 

* உலர்ந்த சருமமாக இருந்தால் கடலை மா, தேன், பால், பன்னீர் மூன்றையும் சேர்த்து 15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.

 

* கடலை மா, பயற்றம் பருப்பு, வெயிலில் காய வைத்த ஓரஞ்சுப் பழத்தோல் மூன்றையும் அரைத்து கத்தில் பூசி வந்தால் முகம் பளபளக்கும்.

 

* மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பயற்றம் பருப்பு மூன்றையும் அரைத்து பூசி வந்தால் பொலிவான நிறம் பெறலாம்.

Popular Post

Tips