நெத்திலி மீன் குழம்பு

thaevaiyaana poarudkal:   neththili meen – 1/2 kiloa chiriya venkaayam – 150 kiraam thakkaali – 4 milakaaythool – 1 daepil spoon thaneyaathool – 1 1/2 daepil spoon pachchai milakaay – 1 ijchi – 1 chiriya thundu poondu – 7 pal thaenkaay paal – 1 damlar venthayam – 1 deespoon koththamalli thalai – 1 chirithalavu enney … Continue reading "neththili meen kulampu"
neththili meen kulampu

தேவையான பொருட்கள்:

 

நெத்திலி மீன் – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 4
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 சிறிய துண்டு
பூண்டு – 7 பல்
தேங்காய் பால் – 1 டம்ளர்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 சிறிதளவு
எண்ணெய் – தேவையானது
உப்பு – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு

 

செய்முறை:

 

மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். இஞ்சியை விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். புளியை கரைத்து ஊற்றவும். இதில் மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Popular Post

Tips