நட்பு

nadpenra alakiya kooddirkul iruvarumaay maaddikondom. meela valiyumillai. viruppamum illai. kaarrodu kalanthu vidda malarin vaacham poal vilakaamal………….. piriyaamal…………..   anpenra orrai noolil uyir koarththu vannaththu poochchiyaay churri thirivom. thadaikal namakkillai. thayakkankalum namakkillai   ennankalaip parimaari kolvathil. nalla nookkankal undu athanaal nalla aerrankalum undu. malarinum melliya ithayamundu. athil enakkena alakiya uraividamum undu.   chiruchiru chandaikalum charchchaikalum namakkul … Continue reading "nadpu"
nadpu

நட்பென்ற அழகிய
கூட்டிற்குள் இருவருமாய்
மாட்டிகொண்டோம்.
மீள வழியுமில்லை.
விருப்பமும் இல்லை.
காற்றோடு கலந்து விட்ட
மலரின் வாசம் போல்
விலகாமல்..............
பிரியாமல்..............

 

அன்பென்ற ஒற்றை
நூலில் உயிர் கோர்த்து
வண்ணத்து பூச்சியாய்
சுற்றி திரிவோம்.
தடைகள் நமக்கில்லை.
தயக்கங்களும் நமக்கில்லை

 

எண்ணங்களைப் பரிமாறி கொள்வதில்.
நல்ல நோக்கங்கள் உண்டு
அதனால் நல்ல
ஏற்றங்களும் உண்டு.
மலரினும் மெல்லிய இதயமுண்டு.
அதில் எனக்கென அழகிய
உறைவிடமும் உண்டு.

 

சிறுசிறு சண்டைகளும்
சர்ச்சைகளும் நமக்குள்
உண்டு - சுகமான
நினைவுகள் என்று.

 

நல்ல நட்பிற்கு
மாசற்ற இதயம் வேண்டும்.
எனக்கோ உன்னதமே நட்பாய்.
நம் காலங்கள் மறைந்தாலும்
உனக்கும் எனக்குமான நட்பு
காற்றோடு கலந்திருக்கும்.

Popular Post

Tips