தீர்ப்பு

pallu poana kaalaththil chollukku enna mathippu?   paththu maatham chumanthaval paththodu pathinonraay kaappakaththil!   annai anaippil valarnthavan avalai anaathaiyaakki rachikkiraay!   choththu illaatha thanthaiyai parru illaamal othukkinaay!   parivu kaaddi valarththavar pachiyaal parithaviththu nerkiraar!   paacham udaintha maanedaa naalai unathu theerppadaa!   eechan meethu aanaidaa naari poakum un vaalvadaa!
theerppu

பல்லு போன
காலத்தில்
சொல்லுக்கு என்ன மதிப்பு?

 

பத்து மாதம்
சுமந்தவள்
பத்தொடு பதினொன்றாய் காப்பகத்தில்!

 

அன்னை அணைப்பில்
வளர்ந்தவன்
அவளை அனாதையாக்கி ரசிக்கிறாய்!

 

சொத்து இல்லாத
தந்தையை
பற்று இல்லாமல் ஒதுக்கினாய்!

 

பரிவு காட்டி
வளர்த்தவர்
பசியால் பரிதவித்து நிற்கிறார்!

 

பாசம் உடைந்த
மானிடா
நாளை உனது தீர்ப்படா!

 

ஈசன் மீது
ஆணைடா
நாறி போகும் உன் வாழ்வடா!

Popular Post

Tips