நயன்தாராவின் புதிய அவதாரம்

viraivil piraputhaevaavai karampidikka irukkum nayanthaaraa, thirumanaththirku piraku mulunaera kudumpa pennaaka maara ullaar.   atharkaaka ippoathae payirchiyai thodankividdaar. mutharkaddamaaka chamaiyal karkum payirchiyil theeviramaaka eedupaddullaar nayanthaaraa.   chimpuvudanaana kathalai muriththu ‌konda pinnar piraputhaevaavai Kadhalikka aarampiththaar nayanthaaraa. aanaal itharku piraputhaevaavin manaivi perumthadaiyaaka irunthaar.   ivarkalukku idaiyaeyaana mothal koard varai chenrathu. kadaichiyaaka ramalaththirku oru perum thokaiyai koduththu avarai chamaathaanappaduththiyathodu, … Continue reading "nayanthaaraavin puthiya avathaaram"
nayanthaaraavin puthiya avathaaram
விரைவில் பிரபுதேவாவை கரம்பிடிக்க இருக்கும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகு முழுநேர குடும்ப பெண்ணாக மாற உள்ளார்.

  அதற்காக இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டார். முதற்கட்டமாக சமையல் கற்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் நயன்தாரா.

  சிம்புவுடனான காதலை முறித்து ‌கொண்ட பின்னர் பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்தார் நயன்தாரா. ஆனால் இதற்கு பிரபுதேவாவின் மனைவி பெரும்தடையாக இருந்தார்.

  இவர்களுக்கு இடையேயான மோதல் கோர்ட் வரை சென்றது. கடைசியாக ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானப்படுத்தியதோடு, விவாகரத்திற்கும் சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா.

 

இதனால் நயன்-பிரபுதேவா இடையே காதலுக்கும், திருமணத்திற்கு தடை நீங்கியது. விவாகரத்து கிடைத்த கையோடு திருமணத்தையும் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர் பிரபுதேவா-நயன் ஜோடி. மேலும் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார் நயன்தாரா.

  தற்போது கேரளாவில் உள்ள தன்னுடைய புதிய வீட்டில் குடியேறியுள்ள நயன், புதிதாக படங்கள் எதுவும் ஒப்புக்கொள்வதில்லை. மாறாக திருமணத்திற்கு பிறகு முழுநேர குடும்ப பெண்ணாக மாறுவதற்கான வேலையில் இறங்கியுள்ளார். இதற்காக முதலில் தீவிர சமையல் கற்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

  இதனிடையே நயன்தாராவை தேடி நிறைய படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளனவாம், ஆனா‌ல் அவற்றையெல்லாம் மறுத்து விடுகிறாராம் நயன்தாரா.

 

இதனால் சகலருக்கும் அறிய தருவது என்ன வென்றால் நயன்தாரா முழுநேர குடும்ப பெண்ணாம்

Popular Post

Tips