ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஒன்றும் கிடையாது

aisvaryaa raay alaki thaan. aanaal ulaka alaki onrum kidaiyaathu enru haalivud nadikar hyoo jakmaen athiradiyaaka kooriyullaar. mumpaiyil epaichichi amaippin 3 naal maanaadu nadanthathu. ithil jakmaen chirappu virunthinaraaka kalanthu kondaar. avarai varavaerra nadikai aisvaryaa raay, alakiya vinaayakar chilaiyai parichaaka koduththaar.   aanaal nekalchchiyil paechiya jakmaenoo, aisvaryaavai alakiyae alla enru koori athiradiththaar.   aisvaryaa kuriththu jakmaen koorukaiyil, … Continue reading "aisvaryaa raay ulaka alaki onrum kidaiyaathu"
aisvaryaa raay ulaka alaki onrum kidaiyaathu
ஐஸ்வர்யா ராய் அழகி தான். ஆனால் உலக அழகி ஒன்றும் கிடையாது என்று ஹாலிவுட் நடிகர் ஹ்யூ ஜாக்மேன் அதிரடியாக கூறியுள்ளார். மும்பையில் எப்ஐசிசி அமைப்பின் 3 நாள் மாநாடு நடந்தது. இதில் ஜாக்மேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை வரவேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், அழகிய விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார்.

  ஆனால் நிகழ்ச்சியில் பேசிய ஜாக்மேனோ, ஐஸ்வர்யாவை அழகியே அல்ல என்று கூறி அதிரடித்தார்.

  ஐஸ்வர்யா குறித்து ஜாக்மேன் கூறுகையில்,
உலகத்திலேயே அழகான பெண் உங்களை வரவேற்பார் என்று கூறினார்கள். உடனே என்ககு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் அந்த உலக அழகி எனது மனைவி டெபோரா (அட்ரா, அட்ரா அட்ரா சக்கை!) என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அது ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா அழகு தான். ஆனால் உலகத்திலேயே அழகான பெண்ணல்ல. என்னைப் பொருத்தவரையில் என் மனைவி டெபோரா தான் மிகவும் அழகான பெண் என்றார்.

 

ஐஸ்வர்யா ராய் பேசுகையில்,
நான் ஹ்யூ ஜாக்மேனை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். சினிமாத்துறையில் உள்ள அழகான மற்றும் திறமையான நடிகர்களில் ஜாக்மேனும் ஒருவர். இந்தியர்கள் சார்பில் அவரை நான் இந்தியாவுக்கு வரவேற்கிறேன் எனறார் ஐஸ். விழாவில் ஷாருக் கானும் கலந்து கொண்டார்.

  ஐஸ்வர்யாவைப் பார்த்து பலரும் ஜொள்ளு விடும் சமயத்தில், ஜாக்மேன் மட்டும் இப்படி லொள்ளாக பேசியது அனைவரையும் சலசலப்பில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் தனது மனைவிதான் மிகப் பெரிய அழகி என்று கூறிய அவரது கண்ணியத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

 

Popular Post

Tips