இந்தியாவில் பிளாக்பெரி உற்பத்தி

nookkiyaa, chaamchan, el.ji., ullidda ulakaththaram vaayntha mopail poan neruvanankalaith thodarnthu pilaakperi neruvanamum inthiyaavil thanathu urpaththi aa‌laiyai amaikka thiddamiddullathu. ithan moolam naaddin vaelaivaayppai madduminri aerrumathi alavaiyum athikarikka inneruvanam thiddamiddullathu.   inthiyaa, ulaka naadukalin mukkiya aaraaychchi maiyamaakavum, virpanai marrum aerrumathi chanthaiyaakavum vilankuvathaal thankalin puthiya aalaiyai inthiyaavil thuvanka thiddamiddiruppathaaka pilaakperi neruvanam theriviththullathu.   maelum pilaakperi neruvanam, inthiyaavil athika … Continue reading "inthiyaavil pilaakperi urpaththi"
inthiyaavil pilaakperi urpaththi
நோக்கியா, சாம்சங், எல்.ஜி., உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த மொபைல் போன் நிறுவனங்களைத் தொடர்ந்து பிளாக்பெரி நிறுவனமும் இந்தியாவில் தனது உற்பத்தி ஆ‌லையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பை மட்டுமின்றி ஏற்றுமதி அளவையும் அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  இந்தியா, உலக நாடுகளின் முக்கிய ஆராய்ச்சி மையமாகவும், விற்பனை மற்றும் ஏற்றுமதி சந்தையாகவும் விளங்குவதால் தங்களின் புதிய ஆலையை இந்தியாவில் துவங்க திட்டமிட்டிருப்பதாக பிளாக்பெரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் பிளாக்பெரி நிறுவனம், இந்தியாவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி தொழில் மற்றும் கம்பெனி பங்குதாரர்களை கொண்டிருப்பதாகவும் பிளாக்பெரி நிறுவனத்தின் இந்தியாவிற்கான ஆராய்ச்சி பிரிவு தலைவர் ராபின் தெரிவித்துள்ளார்.

  குறைந்த முதலீட்டில் அதிகளவிலான மொபைல் மாடல்களை உற்பத்தி செய்ய பிளாக்பெரி திட்டமிட்டுள்ளது. சுமார் 150 முதல் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்த புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது

 

Popular Post

Tips