பேஸ்புக்கால் சிக்கலில் பிரிட்டன் பொலிஸார்!

paespukkil thamathu kadamaikal kuriththu poarupparra vithaththil karuththukkalai eluthiya pala poalisar meethu vichaaranaikal aarampamaakiyullana. poalisarukkaana chamooka inaiyaththala vachathiyoodaaka avarkal inthak karuththukkalaip parimaariyullanar.   maanavarkalin aarppaaddaththai adakka neendanaeram kaaththirunthamai, chiruvar paaliyal thodarpaakak kaithu cheyyappadda oruvar parri koorappaddak karuththukkal, oru chanthaeka naparai kaluththaip pidiththu iluththuch chellum veediyoak kaadchikalai veliyiddamai ena pala chikkalkalil poalisar maaddiyullanar.   esaks piraanthiya poalisarae … Continue reading "paespukkaal chikkalil piriddan poalisar!"
paespukkaal chikkalil piriddan poalisar!
பேஸ்புக்கில் தமது கடமைகள் குறித்து பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை எழுதிய பல பொலிஸார் மீது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பொலிஸாருக்கான சமூக இணையத்தள வசதியூடாக அவர்கள் இந்தக் கருத்துக்களைப் பரிமாறியுள்ளனர்.

  மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்க நீண்டநேரம் காத்திருந்தமை, சிறுவர் பாலியல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒருவர் பற்றி கூறப்பட்டக் கருத்துக்கள், ஒரு சந்தேக நபரை கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்லும் வீடியோக் காட்சிகளை வெளியிட்டமை என பல சிக்கல்களில் பொலிஸார் மாட்டியுள்ளனர்.

  எஸக்ஸ் பிராந்திய பொலிஸாரே இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர். இவர்களுள் பெண் பொலிஸாரும் அடங்குவர்.

 

இவர்கள் தங்களுக்குள் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாலும் அதை பொது மக்களும் வாசிக்கலாம் என்பதை புரிந்து கொள்ளாமலேயே இவ்வாறு நடந்துள்ளனர்.

  பொது மக்களிடமிருந்தே பொலிஸார் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என்று மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

  கடமையில் இல்லாத நேரத்திலும் கூட பொலிஸார் தொழில்சார் பண்புகளையும் தரத்தையும் பேணி நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

  ஆனால் அது இங்கு முற்றாக மீறப்பட்டுள்ளது என்றும் அதுவே விசாரணைகளுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular Post

Tips