காதலித்துப்பார்…

unnai churri oli vaddam thonrum     ulakam arththappadum     raaththiriyin neelam vilankum     unakkum kavithai varum     kaieluththu alakaakum     thapaal kaaran theyvamaavaan     un vimpam vilunthae kannaadi udaiyum     kannerandum oli kollum     Kadhaliththuppaar     pookkalil mothi mothiyae udainthu poaka unnaal mudiyumaa?     ahemchaiyin … Continue reading "Kadhaliththuppaar…"
Kadhaliththuppaar…
உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்

 

  உலகம் அர்த்தப்படும்

 

  ராத்திரியின் நீளம் விளங்கும்

 

  உனக்கும் கவிதை வரும்

 

  கைஎழுத்து அழகாகும்

 

  தபால் காரன் தெய்வமாவான்

 

  உன் விம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்

 

  கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்

 

  காதலித்துப்பார்

 

  பூக்களில் மோதி மோதியே உடைந்து போக உன்னால் முடியுமா?

 

  அஹிம்சையின் இம்சையை அடைந்ததுண்டா?

 

  அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?

 

  உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?

 

  ஐந்தங்குல இடைவெளியில் அமிர்தம் இருந்தும் பட்டினி கிடந்தது பழகியதுண்டா?

 

  சின்னச்சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்காகவேனும்

 

  புலன்களை வருத்தி புதுப்பிக்க முடியுமே அதற்காகவேனும்

 

  ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காகவேனும்

 

  வாழ்ந்துகொண்டே சாகவும் முடியும் செத்துக்கொண்டே வாழவும் முடியும் அதற்காகவேனும் காதலித்துப்பார்

 

  சொர்க்கம்--நரகம் இரண்டில் ஒன்று இங்கே நிச்சயம்

 

Popular Post

Tips