நெத்தலி மீன் பொரியல்

thaevaiyaana poarudkal   * chuththam cheytha neththili meen – 1 /2 kiloa * milakaayththool – 3 thaekkarandi * thaneyaaththool – 4 thaekkarandi * majchalthool – 1 /2 thaekkarandi * elumichchampalam – 2 allathu puli – oru koali kundalavu * enney – 4 kulikkarandi * uppu – thaevaiyaana alavu * karuvaeppilai – 2 koththu * ijchi, … Continue reading "neththali meen poariyal"
neththali meen poariyal

தேவையான பொருட்கள்

 

* சுத்தம் செய்த நெத்திலி மீன் – 1 /2 கிலோ
* மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி
* தனியாத்தூள் – 4 தேக்கரண்டி
* மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
* எலுமிச்சம்பழம் – 2 அல்லது புளி – ஒரு கோலி குண்டளவு
* எண்ணெய் – 4 குழிக்கரண்டி
* உப்பு – தேவையான அளவு
* கருவேப்பிலை – 2 கொத்து
* இஞ்சி, பூண்டு விழுது அல்லது பூண்டு பொடித்தது – 1 தேக்கரண்டி

 

செய்முறை

 

1. நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி, மண் போக நன்கு சுத்தம் செய்ய ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அலச வேண்டும்.


2. பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த பூண்டு, மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாரு பிழிந்து தேவையான உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி குறைந்தது 15 நிமிடம் ஊற விடவும்.


3. கடாயில் 4 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கறிவேப்பிலையை பொரித்து எடுத்த பிறகு, வைத்துள்ள நெத்திலியைப் போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.


4. பொரித்து வைத்துள்ள நெத்திலி மீன்களின் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும்.


5. இஞ்சி பூண்டு விழுதைத் தேவையெனில் பயன்படுத்தலாம் அல்லது பூண்டை மட்டும் அரைத்து பயன்படுத்தலாம்.

Popular Post

Tips