ப்ரைடு ரைஸ்

thaevaiyaana poarudkal   * venkaayam poadiyaaka narukkiyathu – 3 /4 kap * enney – 2 1 /2 maechaikkarandi * muddai – 1 – 2 (muddaiyai laechaaka adiththuk kollavum) * choayaa chaas – 1 /4 thaekkarandikkum kuraivaaka * nallanney -1 /4 thaekkarandikkum kuraivaaka * chikkan elumpillaathathu vaeka vaiththathu – 1 kap (viruppamenel) * kaerad – 1 … Continue reading "praidu rais"
praidu rais

தேவையான பொருட்கள்

 

* வெங்காயம் பொடியாக நறுக்கியது – 3 /4 கப்
* எண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டி
* முட்டை – 1 – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)
* சோயா சாஸ் – 1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக
* நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக
* சிக்கன் எலும்பில்லாதது வேக வைத்தது – 1 கப் (விருப்பமெனில்)
* கேரட் – 1 /2 கப்
* பட்டாணி – 1 /2 கப்
* வெங்காயத்தாழ் – 4
* முளை கட்டிய பயறு – 1 கப்
* சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
* சோறு / சாதம் – 4 கப் (வேக வைத்து ஆற வைத்தது )

 

தேவையான பொருட்கள்

 

1. பாஸ்மதி அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும். அரிசியைக் கழுவி பாத்திரத்தில் லேசாக, அரிசியின் ஈரப் பதம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும்.

 

2. 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 – 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும். சாதத்தை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பழைய சாதம் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.

 

3. சாதம் நன்றாக ஆறினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.

 

4. கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிறவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

5. முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.

 

6. அதே பாத்திரத்தில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி பாத்திரத்தில் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 

7. இல்லையெனில் கலந்து வைத்துள்ள முட்டையைக் பாத்திரத்தில் ஊற்றி லேசாக வதக்கி(முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.

 

8. பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .

 

9. இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது, முளை கட்டிய பயறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

 

10. இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நறுக்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

 

குறிப்பு

 

1. விருப்பத்திற்கேற்ப காய்கறிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிக்கனுக்குப் பதிலாக இறால் பயன்படுத்தலாம்.

 

2. பரிமாறும்பொழுது சில்லி சாஸ், சோயா சாஸ் வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம்.

Popular Post

Tips