சப்பாத்தி

thaevaiyaana poarudkal   * koathumai maavu – 2 kap * enney allathu ney – 2 maechaikkarandi * vethu vethuppaana thanneer – 1 /2 thaekkarandi * uppu   cheymurai   1. koathumai maavu, enney allathu ney aakiyavarrai kaiyaal nanku kalanthu kollavum.   2. uppai vethu vethuppaana thanneeril karaiththu chirithu chirithaaka maavil oorri nanku pichainthu urundaiyaaka uruddik … Continue reading "chappaaththi"
chappaaththi

தேவையான பொருட்கள்

 

* கோதுமை மாவு – 2 கப்
* எண்ணெய் அல்லது நெய் – 2 மேசைக்கரண்டி
* வெது வெதுப்பான தண்ணீர் – 1 /2 தேக்கரண்டி
* உப்பு

 

செய்முறை

 

1. கோதுமை மாவு, எண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றை கையால் நன்கு கலந்து கொள்ளவும்.

 

2. உப்பை வெது வெதுப்பான தண்ணீரில் கரைத்து சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்கு பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

 

3. பின்பு அந்த உருண்டையை (8 – 10) நிமிடங்கள் வரை நன்கு மெது மெதுப்பாகும் வரை பிசைந்து கொள்ளவும்.

 

4. புட் புராசசரை(Food Processor) பயன்படுத்தினால் மாவில் தண்ணீரை ஊற்றி 30 வினாடிகளுக்கும் மேலாக பிசைவதற்கு விடவும்.

 

5. பின் உருண்டையை நெய் தடவிய குழியான பத்திரத்தில் மூடி போட்டு 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை வைக்கவும்.

 

6. 2 மணி நேரத்திற்கு பிறகு உருண்டையை மீண்டும் மாற்றி நீளமாக உருட்டிக் கொள்ளவும். பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

 

7. உருண்டை மேல் லேசாக தண்ணீர் அல்லது மாவு தடவி மெல்லிய வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.

 

8. சப்பாத்தி கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். வட்டமாக உருட்டிய சப்பாத்தியை சப்பாத்தி கல்லில் போட்டு கரண்டியை பயன்படுத்தி சப்பாத்தியின் எல்லா பக்கமும் லேசாக அமிழ்த்தவும்.

 

9. இரண்டு பக்கமும் லேசாக பொன்னிறமாகும் வரை விட்டு பின் எடுக்கவும். இதே போல் மீதமுள்ள உருண்டைகளையும் சுட்டு எடுக்கவும்.

 

10. வேண்டுமானால் சிறிது நெய் விட்டு சுட்டு எடுக்கலாம்.

Popular Post

Tips