இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கைகொடுக்கிறது நெல்லி

anthak kaala manetharkal, avarkal vaeru yaarum illai nam thaaththaa paaddithaan inraikkum churuchuruppaa vokkin poakiraarkal. nanraaka chaappidukiraarkal prashshaa irukkiraarkal. naama antha vayathil appadi iruppoamaa enru nampikkai irukkaa? illaiyaa! kavalai vaendaam. avarkaludaiya enarji lavalin chinnach chinna rakachiyankal itho… ithil unkalaal mudinthathai kadaipidiththup paarunkal…………   1. chukku karuppaddi, ijchi ivaikalai vaanki oru dappaavil poaddu vaiyunkal. vayiru champanthamaana entha … Continue reading "ilamaiyaakavum aarokkiyamaakavum irukka kaikodukkirathu nelli"
ilamaiyaakavum aarokkiyamaakavum irukka kaikodukkirathu nelli

அந்தக் கால மனிதர்கள், அவர்கள் வேறு யாரும் இல்லை நம் தாத்தா பாட்டிதான் இன்றைக்கும் சுறுசுறுப்பா வோக்கிங் போகிறார்கள். நன்றாக சாப்பிடுகிறார்கள் ப்ரஷ்ஷா இருக்கிறார்கள். நாம அந்த வயதில் அப்படி இருப்போமா என்று நம்பிக்கை இருக்கா? இல்லையா! கவலை வேண்டாம். அவர்களுடைய எனர்ஜி லெவலின் சின்னச் சின்ன ரகசியங்கள் இதோ... இதில் உங்களால் முடிந்ததை கடைபிடித்துப் பாருங்கள்............

 

1. சுக்கு கருப்பட்டி, இஞ்சி இவைகளை வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள். வயிறு சம்பந்தமான எந்த உபாதை ஏற்பட்டாலும் மருந்து டப்பாவை திறந்து மாத்திரைகளை போடுவதற்கு பதிலாக டப்பாவில் இருக்கும் , இஞ்சி, சுக்கு கருப்பட்டியை இனிப்பு மாதிரி ருசித்துச் சாப்பிடுங்கள். 10 நிமிடத்தில் பிரச்சினை ஓவர். உடலிற்கு நல்ல ஆரோக்கியம். கருப்பட்டியெல்லாம் சாப்பிட்டா, உடல் கருப்பட்டி மாதிரி நன்றாக இறுகி (ஊளைச்சதை இல்லாமல்) இருக்கும்.

 

2. நெல்லிக்காய்னு சொன்னாலே ஒளவையார், இளமை ஹெயர்டை, ஹெயர் ஒயில்களில் வரும் நெல்லிக்காயின் வீடியோ இவைதான் நம் ஞாபகத்திற்கு வரும். நெல்லிக்காயை டி.வி.யில பார்த்தாலோ, தலையில் தேய்த்தாலோ போதாது உள்ளுக்குள் சாப்பிட்டால்தான் உண்மையான இளமைத் தோற்றத்தை, கருமையான முடியைப் பெறமுடியும். பச்சையாக ஒரு பெரிய நெல்லிக்காயையே சாப்பிட முடியுமா?. அப்படி என்று நீங்க சொல்வது எனக்குப் புரிகிறது. அதுக்காகத்தான் இந்த யோசனை. வெயிலில் உலர்த்தப்பட்ட நெல்லிக்காய் கிடைக்கிறது. அதையும் ஒரு டப்பாவில் போட்டு வைத்து, போகும் வரும் போதெல்லாம் சாப்பிடுங்கள். இளமை, ஆரோக்கியத்தில் உயிர் நாடி தான் நெல்லி.

Popular Post

Tips