கொழும்பு 2 யாழ்பாணம்

naanum enathu nanparum veethi ulaa chenru kondirunthom appoaluthu kelumpil irunthu yaalppaanam chella paerunthu onru thayaaraakik kondirunthathu.   enkiruntho oruvan irandu kokkoa koalaavudan emmai idiththu thallividdu oadichchenru paerunthil aeri udkaarnthu kondaan ivarrai ellaam avathaaneththavaarae paerunthu arukil vanthuviddom   appoaluthu pin irukkaiyil amarntha ilaijan oruvan theruvil yaarvarukiraarkal poakinraarkal enra ethuvitha karichanaiyum illaamal thuppividukinraan   naan thappinaen oruadiyai … Continue reading "kolumpu 2 yaalpaanam"
kolumpu 2 yaalpaanam
நானும் எனது நண்பரும் வீதி உலா சென்று கொண்டிருந்தோம் அப்பொழுது கெழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல பேருந்து ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது.

 

எங்கிருந்தோ ஒருவன் இரண்டு கொக்கோ கோலாவுடன் எம்மை இடித்து தள்ளிவிட்டு ஓடிச்சென்று பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான் இவற்றை எல்லாம் அவதானித்தவாறே பேருந்து அருகில் வந்துவிட்டோம்

 

அப்பொழுது பின் இருக்கையில் அமர்ந்த இளைஞன் ஒருவன் தெருவில் யார்வருகிறார்கள் போகின்றார்கள் என்ற எதுவித கரிசனையும் இல்லாமல் துப்பிவிடுகின்றான்

 

நான் தப்பினேன் ஒருஅடியை கூடுதலாக வைத்திருந்தால் கூடுதலா ஒருதடவை குளிக்க வேண்டியிருந்திருக்கும்... ம்....... ம்...... நான் ஜென்ரில் மான் ஆச்சே என்ன செய்றது பேசாமல் எனது நடையைத்தொடர்ந்தேன்

 

சிறிது தூரம் சென்றபிறகு பேருந்தை திரும்பி பார்த்தேன் பேருந்தில் விசேடசேவை என்றும் கீழே மஞ்கள் துணியில் ------------------- களச்சுற்றுலா என்று எழுதப்பட்டிருந்தது.

 

எனது நண்பர் எனக்கு பேச்சு கொடுக்க தொடங்கினார் "ஒருத்தன் கொக்கோ கோலாவுடன் எம்மை இடித்துதள்ளிவிட்டு ஓடிச்சென்று பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான் தானே அவன் அந்தபோத்தலில் என்ன எடுத்து கொண்டு செல்கிறார் தெரியுமா?" என்று கேட்டார்.....

 

நானும் கடையில் இருந்து கொக்கோ கோலா வாங்கிச் செல்கிறான் என்று சொன்னேன்.... அதற்குள் நண்பர் தொடங்கி விட்டார் "நீங்கள் அவன் எடுத்து சென்ற கொக்கோ கோலாவை சரியாக கவனிக்கவில்லை அதில் கொக்கோ கோலா போத்தல் முழுவதுமாக இருந்ததது. "

 

எனக்கு விளங்கி விட்டது........ எத்தனை சினிமா பார்த்து விட்டோம்....
அவர்களுக்கு கொண்டாட்டம் தான்.....

 

 

Popular Post

Tips