பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-01

mukam thaan alakin muthal amcham. mukam palapalappudan thikalavum, churukka minri irukkavum… veeddilaeyae unkalukku neenkalae cheythu kollum chila valimuraikal… 1.pappaali palaththai araiththu, mukaththil thodarnthu thadavi vara mukapparu, karumpulli aakiyavai maraiyum.   2.thayir arai spoon, elumichchai chaaru oru spoon, oru spoon aarajchu palachchaaru, oru spoon kaaradchaaru, oru spoon ros vaaddar, oruspoon, eesdpavudar arai spoon, ithu ellaavarraiyum kulaiththu … Continue reading "penkalukkaana alakukkurippukal-01"
penkalukkaana alakukkurippukal-01

முகம் தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…

1.பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

 

2.தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு, ஒரு ஸ்பூன் காரட்சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

 

3.தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.

 

4.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன், தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம் எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளிச்சிடும்.

 

5.இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவி வரவும். சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச்சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறும்.

Popular Post

Tips