அழகுக் குறிப்புக்கள்

  poadukuth thollaiyaal avathippadukireerkalaa?   muthal naal iravae venthayaththai ooravaiththu araiththu, thalaikkuth thaeyththuk kuliththup paarunkal. poaduku marainthu vidum. athumaddumalla, mayirk kaalkal valuvaaki koonthalum palapalappaaki vidum. unavil kaaraththaik kuraiththuk kollunkal. kaaramaana unavu mukaththil parukkalai athikamaakki, mukap poalivaiyae keduththu vidum.    neenkal muppathukalil irukkireerkalaa?   kadalaimaavaith thakkaali jusadan (Juice) kalanthu mukaththil aplai cheyyunkal. arai mane naeraththil kulirntha … Continue reading "alakuk kurippukkal"
alakuk kurippukkal

 

பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
 
முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். பொடுகு மறைந்து விடும். அதுமட்டுமல்ல, மயிர்க் கால்கள் வலுவாகி கூந்தலும் பளபளப்பாகி விடும். உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். காரமான உணவு முகத்தில் பருக்களை அதிகமாக்கி, முகப் பொலிவையே கெடுத்து விடும். 
 
நீங்கள் முப்பதுகளில் இருக்கிறீர்களா?
 
கடலைமாவைத் தக்காளி ஜூஸடன் (Juice) கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். அரை மணி நேரத்தில் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் சருமம் சுருக்கமில்லாமல் ஜொலிக்கும். அப்புறமென்ன, முப்பதும் இருபதாகி விடும்.
 
அழகு சருமம் வேண்டுமா?
 
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, ரோஜா இதழ்கள், சந்தனம், பாதாம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் காய வைத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை தயிரில் இந்தப் பொடியைக் கலந்து உடம்பு முழுவதும் தடவுங்கள். அரைமணி நேரம் கழித்து பீர்க்கம் நாரால் உடம்பை மென்மையாகத் தேய்த்துக் குளியுங்கள். உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!
 
உறுதியான கூந்தல் வேண்டுமா?
 
கொப்பரைத் தேங்காயை மெலிதாகச் சீவி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதெல்லாம் தலைக்குத் தேய்த்துக் குளிக்கிறீர்களோ? அதற்கு மறுநாள் தலைமுடியின் மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட்டை அழுந்தத் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து வெறும் தண்ணீரில் அலசுங்கள். உங்கள் கூந்தல் உறுதியாகவும், பட்டுப் போலவும் இருக்கும்.
 
அழகு முகம் கிடைக்கணுமா?
 
இரண்டு ஸ்பூன் கொண்டைக் கடலை, 2 ஸ்பூன் பச்சரிசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். நல்ல கலர் கிடைக்கும். அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் நீராவி பிடித்து வாருங்களேன். முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து முகத்தின் தேஜஸ் கூடி விடும்.

Popular Post

Tips