உடல் எடையை குறைக்க சில வழிகள்

  unavaik kuraiththu udalai alakaakka poakirom enra thaaraka manthiraththai pinparrum ivarkalil palar paddine kidanthu udal ilaiththuppoavathum undu.   ippadippaddavarkal aarokkiyamaana dayad muraiyai pinparra chila kurippukal:   * thinamum aethaavathu oru pala yoos kudiyunkal. neenkal kudikkum pala yoos appoathu thayaarikkappaddathaaka irukka vaendum. athil ineppu marrum ais chaerkkaamal chaappidavum. ineppu chaerththaal palaththin mulu chaththum kurainthu vidum.   … Continue reading "udal edaiyai kuraikka chila valikal"
udal edaiyai kuraikka chila valikal

 

உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
 
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்:
 
* தினமும் ஏதாவது ஒரு பழ யூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ யூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் இனிப்பு மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். இனிப்பு சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
 
* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
 
* வேக வைத்த பயறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
 
* இட்லி, இடியாப்பம், அப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
 
* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
 
* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
 
* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
 
* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
பழங்கள் சாப்பிடும் முறை:
 
 காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தென்பும் கிடைக்கும்.
 
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
 
பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து யூசாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. பழங்களை யூசாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
 

Popular Post

Tips