சண்டிகேஸ்வரர் சன்னதியில் மட்டும் கை தட்டி வணங்குவது ஏன்?

perumpaalaana chivan koayilkalil chivanai vananki viddu pirakaaram churri varumpoathu, thurkkai channathikku arukil chandikaesvarar channathi irukkum. ivarai vanankum paktharkal, chodakku poaddo allathu palamaaka kaithaddiyoa vanankuvaarkal. aanaal appadi vananka koodaathu. chandikaesvarar eppoathum thiyaanaththil iruppavar. chivanedamae eesvara paddam perravar. ivar  koayilukku varum paktharkal, ennenna koarikkai vaiththaarkal ena chivanedam kooruvathaaka aitheekam. enavae chivanai vanankividdu ivarai vanankum poathu, mika methuvaaka … Continue reading "chandikaesvarar channathiyil maddum kai thaddi vanankuvathu aen?"
chandikaesvarar channathiyil maddum kai thaddi vanankuvathu aen?

பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள், சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவார்கள்.

ஆனால் அப்படி வணங்க கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்றவர். இவர்  கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம்.

எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை கைதட்டி, வந்தேன்…வந்தேன்…வந்தேன்… சிவனின் தரிசனம் கண்டேன்… கண்டேன்.. கண்டேன்…என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Popular Post

Tips