நவராத்திரி முதல் நாள் வழிபாடு! (28.09.11)

navaraaththiriyin muthal moonru naadkal ampikaikku uriyavai. muthalnaalil, avalai chaamundiyaaka alankariththu valipada vaendum. mundan ennum achuranai chamhariththaval ival. chaamundaa enrum ivalai alaippar. ival mikavum koapakkaari. koapam illaatha arachanedam kudimakkal ajchamaaddaarkal. mannanedam makkal payappadavillai enel avanaal neethiyai kaappaarra mudiyaathu. enavae, neethiyai kaakka ival koapamaaka irukkiraal. ivalai "raajaraajasvari enrum alaippar. raajaraajanaana chivaperumaanukkae thalaiviyaaka irunthu nammai paripaalippaval ampikai. athanaal … Continue reading "navaraaththiri muthal naal valipaadu! (28.09.11)"
navaraaththiri muthal naal valipaadu! (28.09.11)

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகைக்கு உரியவை. முதல்நாளில், அவளை சாமுண்டியாக அலங்கரித்து வழிபட வேண்டும். முண்டன் என்னும் அசுரனை சம்ஹரித்தவள் இவள். சாமுண்டா என்றும் இவளை அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. கோபம் இல்லாத அரசனிடம் குடிமக்கள் அஞ்சமாட்டார்கள்.

மன்னனிடம் மக்கள் பயப்படவில்லை எனில் அவனால் நீதியை காப்பாற்ற முடியாது. எனவே, நீதியை காக்க இவள் கோபமாக இருக்கிறாள். இவளை "ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். ராஜராஜனான சிவபெருமானுக்கே தலைவியாக இருந்து நம்மை பரிபாலிப்பவள் அம்பிகை.

அதனால் தான் அவளுக்கு "ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் உண்டானது. அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்…அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துகிறாள்.

தவறு செய்யும் போது மகாராணியைப் போல் கண்டிக்கிறாள். அதே சமயத்தில் தன் குழந்தைகளின் மீது பரம காருண்யத்தோடு பேரருளையும் பொழிகிறாள். நவராத்திரி முதல் நாளான நாளை, ராஜ ராஜேஸ்வரியை பக்தியோடு பூஜித்து மகிழ்வோம். நாளைய நைவேத்யம்சர்க்கரைப் பொங்கல் பாட வேண்டிய பாடல் அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே ஆலவாய் ÷க்ஷத்திர ஒளியே உமையே வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனிநீயே வைகைத் தலைவியே சரணம் தாயே.

 

நவராத்திரி நாமாவளி

 


நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

 

துர்க்கா தேவி

 

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

 

லெட்சுமி ஸ்ரீதேவி

 

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

 

ஸ்ரீசரஸ்வதி தேவி

 

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம.

Popular Post

Tips