பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-03

1.puliththa morai mukaththil 15 nemidam thadavi, mithamaana chuduneeril kaluva mukampoalivu perum. ithai thodarnthu 15 naadkalukku cheythu vara nalla palan kidaikkum.   2.mulankai (muddi) karuppaakavum, chora chorappaakavum irunthaal, thaenkaayenneyudan elumichchai chaaru kalanthu thadavi vara miruthuvaaka maarum.   3.thaen marrum elumichchai chaaru kalantha kalavaiyai uthaddin meethu thodarnthu thadavi vanthaal, tharam kuraintha lipsdik payanpaduththuvathaal aerpadum karumai neram maraiyum. … Continue reading "penkalukkaana alakukkurippukal-03"
penkalukkaana alakukkurippukal-03

1.புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம்பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

 

2.முழங்கை (முட்டி) கறுப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

 

3.தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.

 

4.தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

 

5.முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.

Popular Post

Tips