எனக்கு உண்டான மரண அனுபவம்…

ulakaththil ulla makkalukku elloarukkum ovvooru vaalkai champavankalil aerpadum anupavam avarkal vaalum vaalvil nerantharamaaka thankividum. ithil enakku aerpadda anupavaththai unkaludan pakirnthu kolkiraen. chila varudankalukku mun orunaal naan udal achaivukal aethum arra nelaiyil tharaiyil verumanae paduththukkondu maraneththathupoala athaavathu naan iranthathupoala enne en nenaivukal thaanki ulla manathai nampavaiththaen     appoathu en udampil thuli kooda achaivu illaamal amaithiyaaka … Continue reading "enakku undaana marana anupavam…"
enakku undaana marana anupavam…
உலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு வாழ்கை சம்பவங்களில் ஏற்படும் அனுபவம் அவர்கள் வாழும் வாழ்வில் நிரந்தரமாக தங்கிவிடும். இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சில வருடங்களுக்கு முன் ஒருநாள் நான் உடல் அசைவுகள் ஏதும் அற்ற நிலையில் தரையில் வெறுமனே படுத்துக்கொண்டு மரணித்ததுபோல அதாவது நான் இறந்ததுபோல எண்ணி என் நினைவுகள் தாங்கி உள்ள மனதை நம்பவைத்தேன்

 

  அப்போது என் உடம்பில் துளி கூட அசைவு இல்லாமல் அமைதியாக இருந்தேன். அம்மனதை நம்பவைக்கும் முயற்சியிலே இருந்தேன். "நான் இறந்து போய்விட்டேன், இறந்து போய்விட்டேன்" என்று மனதில் திரும்ப திரும்ப சொல்லியபடியே இருந்தேன். ஒரு சில நிமிடங்களில் என் மனது நான் சொன்னதை நம்ப ஆரம்பித்துவிட்டது. இப்போது மனது என்னிடமிருந்து தனித்துவிடப்பட்டது. அந்த நேரத்தில் எனது மனது பரிதவித்த பரிதவிப்பு இருக்கிறதே..! எப்பப்பா..அதை வார்த்தைகளில் சொல்லமுடியாத பரிதவிப்பு.

 

  மனது உண்மையில் "நான் இறந்துவிட்டேன்" என்று நம்ப ஆரம்பித்துவிட்டது. "அவ்வளவுதான் இந்த உடம்பு மீண்டும் திரும்ப வராது உறவுகள் எல்லாம் அவ்வளவுதான். மனைவி, குழந்தைகள் எல்லாம் விட்டு விட்டு போகவேண்டியதுதான். மறுபடியும் சேரமுடியாதே..! என்ற ஒருவிதமான இறுக்கமான பரிதவிப்பு. அது எதுபோல பரிதவிப்பாய் இருக்கும் என்று சொன்னால் "நீங்கள் எப்போதாவது மரணத்தை நெருங்கி சென்று வந்திருந்தால் அதை நீங்கள் உணர்ந்திருக்கலாம் அப்போது உங்களுக்கு ஏற்படும் பயம் "அவ்வளவுதான் நம் கதை முடிந்தது" என்ற நினைக்க தோன்றும். ஒரு பத்து பதினைந்து மாடி கொண்ட ஒரு கட்டிடத்தில் முழுவது மூடிய லிப்டில் நீங்கள் தனியாக போகும் போது லிப்ட் எட்டாவது மாடியில் சென்று கொண்டிருக்கும்போது மின்சார தடைபட்டு நின்றால் அப்போது ஏற்படும் ஒரு நிலை அது கட்டாயம் மரண நிலைக்கு ஒப்பானதுதான்.

 

  அப்போது மூச்சு திணறல் ஏற்படும், ஒருவித படபடப்பு, பரிதவிப்பு "அவ்வளவுதான் நம் கதை முடிந்தது" என்ற நினைப்பு கூடவே வந்துவிட்டு போகும். இப்படிபட்ட பல சம்பவங்கள் என் வாழ்வில் வந்துபோன அனுபவங்கள் உண்டு. அவ்வனுபவம் மரணத்தை தொட்டுவிட்ட அனுபவமாய் இருக்கும் ஆனால் இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மரணத்தின் ஒரு புதுவித வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. என் மனம் அலைந்த பாடு இருக்கிறதே பெரும் போராட்டமே நடக்கும். அதில் இருந்துதான் நான் தெரிந்துகொண்டேன். "உயிர் பிரிந்த பின் மனமானது நிறைவேறாத ஆசைகளுடன் எண்ணங்களுடனே தங்கியிருக்கும்" என்றும் மனமானது அந்த ஆசை எண்ணங்கள் நிறைவேற புதிய உடலை தாங்கி பிறப்பெடுக்கும் என்றும் அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

 

 
இவை எல்லாம் என் அனுபத்தில் நான் கண்ட உண்மை...இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்தால்தான் உங்களுக்கு அது உண்மையாக இருக்கும். இதேபோன்று இன்னொரு அனுபவமும் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை நான் தியானம் செயலாம் என்று அமர்ந்தேன் அமர்ந்து சற்று நேரம் கண்ணை மூடிய நிலையில் என் எண்ணங்களையே கவனித்து கொண்டிருந்தேன். சட்டேன என் எண்ணம் திசை மாறிய பயணம் செய்தது மனத்தின் பிடிப்பு இல்லாமல் எண்ணம் படுவேகமாக சென்று கொண்டிருந்தது. வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை படு பயங்கரமான வேகம் அது ஒளிவேகத்தைவிட மிஞ்சிய வேகமாகத்தான் இருந்திருக்கும் அது எங்கையோ என்னை இழுத்து கொண்டே சென்றது.

 

 

ஒரு இளம் சிவப்பான நிறம் அதினுள் எங்கே சென்று கொண்டே இருக்கிறேன். அவை என்னவென்று ஆராயா கூட அங்கே எண்ணம் இல்லை. ஒரு நிலையில் நான் பயந்துவிட்டேன். கடும் முயற்சி செய்து கண்ணை திறந்தேன். கண்ணை திறந்தால் நான் இருந்த இடத்தில்தான் உட்கார்ந்துகொண்டிருந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை பிரம்மை பிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டிருந்தேன் மீண்டும் மீண்டும் என் நினைவில் அந்த காட்சிகள் ஓடிகொண்டிருந்தது.

 

  மறுநாள் அதே இடத்தில் தியானத்தில் உட்கார்ந்தேன். இப்போதும் கண்ணை மூடி அமைதியாக என் எண்ணங்களை கவனித்தேன் இப்போது முன் நாள் ஏற்பட்ட அந்த காட்சி ஏற்படவில்லை மீண்டும் மீண்டும் முயற்சியில் இருந்தேன் ஆனால் அது இன்று வரை எனக்கு தோன்றவில்லை அந்த நிகழ்வு ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து நூலகத்தில் விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை படித்துகொண்டிருந்தேன் அப்புத்தகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுவத்தையும் சொல்லிருந்தார் அதுபோல ஏற்படும் நிலை ஒருவரின் ஆன்மிக மேலான நிலையான சமாதி நிலைக்கு ஒருவரை இட்டுசெல்லும் என்று குறிப்பிடபட்டிருந்தது.

 

  ஆனால் சில பேர் அந்த நிகழ்வு ஏற்படும் அச்சத்தை பார்த்து திரும்பி வந்துவிடுவார்கள். அதை கடந்து சென்றால் சமாதி நிலை அடையலாம். என்று அவரால் சொல்லபட்டியிருந்தது. மரணத்தை தழுவிய இன்னொரு நிகழ்வு. ஒரு முறை நான் நன்றாக உறங்கிய நிலையில் என் உடலை நானே பார்பதுபோல ஒரு காட்சி ஏற்பட்டது. அதில் என் உடம்பு எப்படி இருக்கிறது என்று நானே பார்கின்றேன் ஆனால் பார்க்கும் எனக்கு எந்த உடலும் இல்லை ஆனால் என்னால் பார்க்கமுடிகிறது, கேட்கமுடிகிறது, அதை உணரமுடிகிறது. இதில் கேட்க முடிகிறது என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். நான் உறங்குவதற்கு முன்னே பக்கத்து வீட்டில் சில பேர் பேசும் சத்தம் என் காதில் விழுந்தது. அவர்கள் ஏதோ பேசிகொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி நானும் நன்றாக உறங்கினேன் என் உறக்கம் தழுவதை நான் நன்றாக உணர்ந்தேன்.

 

  உறங்கிய சிறிது நேரத்தில் என் நினைவு பிரிக்கப்பட்டு என் உடலை நானே பார்கின்றேன். இது எனக்கு ஏற்பட்ட உண்மை அனுபவம் இதில் சிறிதளவும் கற்பனை இல்லை. கற்பனையை சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை. என்னை நானே பார்த்தேன். அந்த உடல் இல்லா நான் பக்கத்து வீட்டில் பேசுவதை நன்றாக கேட்கிறேன். என் உடலையும் பார்கிறேன். என்னால் போகமுடிகிறது என் உடலையே சுற்றி சுற்றி வருகிறேன். இது எனக்கு ஒன்றும் புரியவில்லை "நான் எப்படி இங்கே படுத்துகொண்டிருக்கிறேன்" என்று ஒருவித குழப்பம். அந்த குழப்பம் கொஞ்சம் ஆழ்ந்து போகும்போதே என் உடம்பில் ஒருவித சிலிர்பு ஏற்பட்டது.

 

  நான் மிரண்டு எழுந்து உட்கார்ந்தேன். சற்றும் முற்றும் பார்த்தேன் யாரும் இல்லை என் உடலை இப்போது பார்க்க முடிகிறது. இப்போதும் மீண்டும் குழப்பம் யார் என்னை பார்த்தது" என்று ஆனால் பக்கத்து வீட்டில் பேசும் பேச்சுகள் நன்றாக கேட்டுகொண்டிருந்தது இதற்கு முன் என்ன பேசினார்கள் என்றும் என் நினைவில் இருந்தது. அப்போதுதான் என்னால் உணரமுடிந்தது உயிர் தற்காலிகமாக பிரிந்த நிலையை...ஏனென்றால் தூக்கமும் ஒரு தற்காலிக மரணத்திற்கு (sleep is temprary death) ஒப்பானதுதான் என்று ஒரு புத்தகத்தில் படித்தது நினைவில் வந்தது. அந்த மரணமும் என்னால் உணரமுடிந்தது. இதுபோல் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் மறக்கமுடியாத அனுபவங்களை என் நினைவிலே தங்கிவிட்டது.................

 

Popular Post

Tips