பீச் சுண்டல்

  thaevaiyaanavai:    kaayntha paddaane – oru kap,  poadiyaaka narukkiya maankaayth thundukal – 2 deespoon,  pachchai milakaay viluthu – oru deespoon,  kaduku, uluththamparuppu, cheerakam – thalaa kaal deespoon.  ijchith thuruval – kaal deespoon,  perunkaayaththool – kaal deespoon,  karivaeppilai – chirithalavu,  thaenkaay thuruval – 3 daepilspoon,  uppu, enney – thaevaiyaana alavu.   cheymurai:  paddaaneyai oora vaiththu, … Continue reading "peech chundal"
peech chundal

 

தேவையானவை: 
 
காய்ந்த பட்டாணி – ஒரு கப், 
பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் – 2 டீஸ்பூன், 
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், 
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன். 
இஞ்சித் துருவல் – கால் டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், 
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
 
செய்முறை: 
பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தாளிக்கவும். 
 
வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால்… சுவையான 'பீச் சுண்டல்’ தயார்!

Popular Post

Tips