கைபேசி வழியே ஒரு நட்பு

nadpukku ilakkanam padaiththaval nee nalluravukku nannayam kaaddiyaval nee en tholi enru aekamanathaaka aana pinpu aemaarrankalai thaanka manathai uruthiyaakkiyaval nee…   naalum paarththu palakum nadpae nalinthu poakum intha kaalaththil kaipaechivali vantha nadpu kaalam kadanthu nerkum enpathil aiyamillai???   kaipaechiyilthaan arimukamaanaval enraalum kadaichi varai un nadpu vaendum enrae thonrukirathu……   mukam paarththu vantha nadpalla ithu enraalum ithu … Continue reading "kaipaechi valiyae oru nadpu"
kaipaechi valiyae oru nadpu

நட்புக்கு இலக்கணம் படைத்தவள் நீ
நல்லுறவுக்கு நன்னயம் காட்டியவள் நீ
என் தோழி என்று ஏகமனதாக ஆன பின்பு
ஏமாற்றங்களை தாங்க மனதை
உறுதியாக்கியவள் நீ...

 

நாளும் பார்த்து பழகும் நட்பே
நலிந்து போகும் இந்த காலத்தில்
கைபேசிவழி வந்த நட்பு
காலம் கடந்து நிற்கும்
என்பதில் ஐயமில்லை???

 

கைபேசியில்தான் அறிமுகமானவள்
என்றாலும் கடைசி வரை
உன் நட்பு வேண்டும் என்றே
தோன்றுகிறது......

 

முகம் பார்த்து வந்த நட்பல்ல
இது என்றாலும்
இது அகம் பார்த்து வந்த
நட்பானதால் ஆனந்தம் கொள்கிறேன்.

 

ஆயிரம்ஆண்டுகள் கடந்தாலும்-இனி
உன்னைப்போல் ஒரு தோழி
எனக்கு மட்டுமல்ல
யாருக்கும் கிடைக்கபோவதில்லை
என்பதில் உன்னைநினைத்து,
நினைத்து கர்வப்படுகிறேன்.

Popular Post

Tips