இஞ்சி குழம்பு

  thaevaiyaana poarudkal:   ijchi – 50 kiraam milakaay varral – 8 chinna venkaayam – 18 mulup poondu – 1 majchal thool – 1/4 thaekkarandi thuruviya thaenkaay – 4 thaekkarandi thakkaali – 2 enney – 4 maejaikkarandi kaduku – 1/2 thaekkarandi cheerakam – 1/2 thaekkarandi kadalaipparuppu – 1/2 thaekkarandi ulunthu – 1/2 thaekkarandi mallith thool … Continue reading "ijchi kulampu"
ijchi kulampu

 

தேவையான பொருட்கள்:
 
இஞ்சி – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 8
சின்ன வெங்காயம் – 18
முழுப் பூண்டு – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி
தக்காளி – 2
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உளுந்து – 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் – 5 தேக்கரண்டி
புளி – சின்ன எலுமிச்சை அளவு
உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு
 
செய்முறை:
 
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் இஞ்சி போட்டு வதக்கி எடுக்க வேண்டும். அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல் வறுத்து எடுக்க வேண்டும். பின் 3 கொத்து கறிவேப்பிலை போட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக மல்லி தூள் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். இவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
 
புளியை கரைத்து வைக்க வேண்டும். வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்க வேண்டும். மிச்சம் உள்ள எண்ணெயை வாணலியில் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
 
இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் திரண்டதும் இறக்கி வைக்க வேண்டும்.

Popular Post

Tips