சிக்கன் நூடில்ஸ்

  thaevaiyaana poarudkal:   mulu koali – 1 nooduls – 500 kiraam venkaayam – 3 pachchaimilakaay – 5 muddai – 5 karad – 2 leeks – 1 milakaayththool – 2 maechaikkarandi uppu, enney – thaevaiyaana alavu   cheymurai:   oru periya paaththiraththil thanneer oorri kothikka vaikka vaendum. athil mulukkoaliyai uppu chaerththu vaeka vaikka vaendum. koali … Continue reading "chikkan noodils"
chikkan noodils

 

தேவையான பொருட்கள்:
 
முழு கோழி - 1
நூடுல்ஸ் - 500 கிராம்
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 5
முட்டை - 5
கரட் - 2
லீக்ஸ் - 1
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதில் முழுக்கோழியை உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். கோழி வெந்ததும் எடுத்து ஆற விட வேண்டும். பிறகு தோல், எலும்பை நீக்கி விட்டு தசையை மட்டும் எடுத்து உதிர்த்துக் கொள்ள வேண்டும். உதிர்த்த சிக்கினுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் வைக்க வேண்டும். கரட்டை துருவிக் கொள்ள வேண்டும். லீக்ஸ், வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கரட் மற்றும் லீக்ஸினை உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நூடுல்ஸை தயாராக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்க வேண்டும்.
 
வெங்காயம் வதங்கி வரும் போது பச்சை மிளகாய், முட்டையை அடித்து ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். நூடுல்ஸின் மேல் பொரித்த சிக்கன், வதக்கிய காரட், வறுத்த முட்டை வெங்காயக் கலவையைப் போட்டு நன்றாக பிரட்டிக் கலந்து கொள்ள வேண்டும். இப்போது சிக்கன் நூடுல்ஸ் தயார்.

Popular Post

Tips