உருளைக்கிழங்கு ஆம்லெட்

  thaevaiyaana poarudkal:   urulaik kilanku -350 kiraam muddai-6 milakaayththool-1 thaekkarandi venkaayam-1 pachchai milakaay-2 poondu-2 pal choayaa choas-3 thaekkarandi nallanney-1 thaekkarandi milaku -1 thaekkarandi uppu,enney thaevaiyaana alavu   cheymurai:   urulaik kilankai mukkaal pathaththirku aviththu, tholai uriththu vaddamaaka vedda vaendum. venkaayam, poondu,pachchai milakaayaip poadiyaaka narukka vaendum. oru paaththiraththil muddaiyai udaiththu oorri, choayaa choas, nallanney, uppu, … Continue reading "urulaikkilanku aamlad"
urulaikkilanku aamlad

 

தேவையான பொருட்கள்:
 
உருளைக் கிழங்கு -350 கிராம்
முட்டை-6
மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
பூண்டு-2 பல்
சோயா சோஸ்-3 தேக்கரண்டி
நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையான அளவு
 
செய்முறை:
 
உருளைக் கிழங்கை முக்கால் பதத்திற்கு அவித்து, தோலை உரித்து வட்டமாக வெட்ட வேண்டும். வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சோயா சோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுதூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்க வேண்டும்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெட்டிய உருளைக் கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். எண்ணெயை கிச்சின் பேப்பரில் ஒற்றி எடுக்க வேண்டும். பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்க வேண்டும்.

Popular Post

Tips