நீங்கள்? உபயோகிக்கும் லிப்ஸ்டிக்…..!

marravarkal upayoakikkum lipsdikkukalai pakirnthu kollak koodaathu; athanaal, thorruk kirumikal parava vaayppundu. * ippoathu maed pinesh lipsdikkukal mikavum pirapalam. avarril eerappatham kuraivu enpathaal, uthadukalil ulla iyarkaiyaana enneykalai aliththu vidum. enavae, avarrai eppoathaavathuthaan upayoakikka vaendum. * tharamaanathaaka illaatha padchaththil, thinachari lipsdik upayoakippathaal, uthadukal karuththum, varandum poakak koodum. enavae, tharamaana lipsdikkukalaaka paarththu upayoakikka vaendum. * lipsdik poada upayoakikkum … Continue reading "neenkal? upayoakikkum lipsdik…..!"
neenkal? upayoakikkum lipsdik…..!

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளை பகிர்ந்து கொள்ளக் கூடாது; அதனால், தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

* இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே, அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

* தரமானதாக இல்லாத பட்சத்தில், தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால், உதடுகள் கறுத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே, தரமான லிப்ஸ்டிக்குகளாக பார்த்து உபயோகிக்க வேண்டும்.

* லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மறுபடி அதை உபயோகிக்கும் போது, தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றிவிட வேண்டியது மிக முக்கியம்.

* லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக் கூடாது; அது, உதடுகளின் முழுமையான அழகை 
வெளிப்படுத்தாது. எனவே, லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

* உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க, பேஸ் வாஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
உதடுகளுக்கு மேக்-அப் போடும் போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: முதலில் பவுண்டேஷன் தடவி விட்டு, பிறகு லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

* லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கமில்லாதவர்கள், லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி, பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது; அதையும் உபயோகிக்கலாம்.

* லிப்ஸ்டிக் உபயோகிக்காமல், நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள் ளும் பழக்கம் சிலருக்கு உண்டு; இது, தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல் தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

* லிப் பேஸ் தடவி, அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.


 

Popular Post

Tips