சாம்பார் சாதம்

  thaevaiyaanappoarudkal:    arichi – 1 kap  thuvaram paruppu – 1/2 kap  puli – oru chiru elumichcham pala alavu  chaampaar poadi – 2 deespoon  majchal thool – 1/4 deespoon  uppu – 2 deespoon allathu thaevaikkaerravaaru    kaaykarikal:    chaampaar venkaayam – 10  thakkaali – 1  pachchai milakaay – 2  kalantha kaaykal – 2 muthal 3 … Continue reading "chaampaar chaatham"
chaampaar chaatham

 

தேவையானப்பொருட்கள்: 
 
அரிசி – 1 கப் 
துவரம் பருப்பு – 1/2 கப் 
புளி – ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு 
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 
உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு 
 
காய்கறிகள்: 
 
சாம்பார் வெங்காயம் – 10 
தக்காளி – 1 
பச்சை மிளகாய் – 2 
கலந்த காய்கள் – 2 முதல் 3 கப் வரை (நடுத்தர அளவிற்கு வெட்டியது) 
 
விருப்பமான அல்லது வீட்டிலுள்ள எந்த வகை காய்களையும் சேர்க்கலாம். நான் இதில் முருங்கைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, குடை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துள்ளோம். 
 
வறுத்தரைக்க: 
 
காய்ந்த மிளகாய் – 2 முதல் 3 வரை 
தனியா – 1 டேபிள்ஸ்பூன் 
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் 
பெருங்காய்ம் – ஒரு பட்டாணி அளவு 
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் 
 
தாளிக்க: 
 
எண்ணை – 2 டீஸ்பூன் 
நெய் – 2 டீஸ்பூன் 
கடுகு – 1/2 டீஸ்பூன் 
வெந்தயம் – 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் – 2 
கறிவேப்பிலை – சிறிது 
கொத்துமல்லி இலை – சிறிது 
முந்திரிப்பருப்பு – சிறிது (விருப்பப்பட்டால்) 
 
செய்முறை: 
 
அரிசியையும், பருப்பையும் நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் 3 முதல் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் போட்டு 5 முதல் 6 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். 
 
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயம், கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்தப் பொருட்கள் சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். புளியை சிறிது நீரில் ஊறவைத்து, கரைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். 
 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது வாணலியில், 2 டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். மிளகாய், வெங்காயம் இரண்டும் வாசனை வர வதங்கியவுடன், நறுக்கி வைத்துள்ள காய்களைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின் தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்குத் தேவையானத் தண்ணீரைச் சேர்க்கவும். மூடி போட்டு காய்கள் வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும், புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். சாம்பார் சற்று நீர்க்க இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையானால் மேலும் நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்கும் பொழுது, அடுப்பைத் தணித்து விட்டு, அதில் வேக வைத்துள்ள சாதம்/பருப்ப் கலவையை, நன்றாக மசித்து விட்டு, கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும். அத்துடன் பொடித்து வைத்துள்ளப் பொடி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். 
 
ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். 

Popular Post

Tips