அன்னாசிப்பழ கேசரி

  thaevaiyaanappoarudkal:   ravaa – 1 kap annaachippalam poadiyaaka narukkiyathu ‍- 1 kap charkkarai – 2 kap ney – 4 allathu 6 daepilspoon munthirippa‌ruppu ‍- chirithu kaayntha‌ thiraadchai – chirithu aela‌kkaay poadi – 1 deespoon kaecha‌ri alla‌thu ma‌jcha‌l nera‌ ka‌la‌r ‍- chirithu   cheymurai:     oru vaana‌liyil 2 daepilspoon neyyai viddu, athil ra‌vaavaip poaddu … Continue reading "annaachippala kaechari"
annaachippala kaechari

 

தேவையானப்பொருட்கள்:
 
ரவா – 1 கப்
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது ‍- 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 4 அல்லது 6 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்ப‌ருப்பு ‍- சிறிது
காய்ந்த‌ திராட்சை – சிறிது
ஏல‌க்காய் பொடி – 1 டீஸ்பூன்
கேச‌ரி அல்ல‌து ம‌ஞ்ச‌ள் நிற‌ க‌ல‌ர் ‍- சிறிது
 
செய்முறை:
 
 
ஒரு வாண‌லியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும். அதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.
 
அன்னாசிப்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (மைக்ரோ அவனில் வைத்தும் வேக விடலாம்). சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
 
அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும். ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் அன்னாசிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கட்டி எதுவும் இல்லாமல், நன்றாகக் கிளறி, கேசரி அல்லது மஞ்சள் கலர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
 
குறிப்பு: இத்துடன், இரண்டுத் துளி "அன்னாசிப்பழ எஸ்ஸென்ஸ்" சேர்த்தால், இன்னும் வாசனையாக இருக்கும். அன்னாசிப் பழம், மிகவும் இனிப்பாக இருந்தால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

Popular Post

Tips