பப்பாளிப்பழ அல்வா

  thaevaiyaanappoarudkal:   pappaalippalam (chiru thundukalaaka veddiyathu) – 2 kap charkkarai – 1/2 kap paal – 1 kap arichi maavu – 1 daepilspoon neya – 3 muthal 4 daepilspoon varai aelakkaayththool – 1/4 deespoon munthiripparuppu – 10   cheymurai:   oru vaanaliyil oru deespoon ney viddu munthiripparuppai varuththedukkavum. athae vaanaliyil arichi maavaip poaddu ilaechaaka varuththeduththu … Continue reading "pappaalippala alvaa"
pappaalippala alvaa

 

தேவையானப்பொருட்கள்:
 
பப்பாளிப்பழம் (சிறு துண்டுகளாக வெட்டியது) – 2 கப்
சர்க்கரை – 1/2 கப்
பால் – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
நெய – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
 
செய்முறை:
 
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் அரிசி மாவைப் போட்டு இலேசாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
பாலைக் காய்ச்சி ஆறவிடவும். ஆறிய பாலில் வறுத்தெடுத்த அரிசி மாவைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். (அரிசி மாவு அல்வாவைக் கெட்டிப் படுத்த உதவும்).
 
மிக்ஸியில் பப்பாளிப் பழத்துண்டுகளைப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
 
அரைத்த விழுதை ஒரு அடி கனமான வாணலியில் போட்டு 7 அல்லது 10 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறவும்.
 
பின்னர் அதில் சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். தித்திப்பு போதுமா எனறுப் பார்த்து, தேவையானால் மேலும் சிறிது சர்க்கரைச் சேர்க்கவும்.
 
சர்க்கரையும் பப்பாளி விழுதும் நன்றாகச் சேரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.
 
பின்னர் அதில் பாலை விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரைக் கிளறவும்.
 
அதன் பின் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கிளறவும்.
 
அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவ்வப்பொழுது சிறிது நெய்யை விட்டு, அல்வா சுருண்டு வரும் வரை கிளறி விடவும்.
 
கடைசியில், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
 
கீழே இறக்கி, ஒரு நெய் தடவியக் கிண்ணத்திலோ, தட்டிலோ மாற்றி வைக்கவும்.

Popular Post

Tips