தக்காளி குழம்பு

  thaevaiyaanappoarudkal:   thakkaali – 4 (naduththara alavu) periya venkaayam – 1 poondu – 4 pal thaenkaayththuruval – 2 daepilspoon kachakachaa – 1 deespoon  munthiripparuppu – 4 puli – chiru elumichcham pala alavu chaampaar poadi – 1 daepilspoon mujchal thool – 1/4 deespoon ennai – 4 daepilspoon kaduku – 1/2 deespoon cheerakam – 1 deespoon … Continue reading "thakkaali kulampu"
thakkaali kulampu

 

தேவையானப்பொருட்கள்:
 
தக்காளி – 4 (நடுத்தர அளவு)
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன் 
முந்திரிப்பருப்பு – 4
புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
முஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
செய்முறை:
 
தக்காளியை நான்கைந்து துண்டுகளாக வெட்டி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் 3 நிமிடங்களுக்கு வதக்கி, ஆறவைத்து பின்னர் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
நறுக்கிய வெங்காயத்தில் பாதியை எடுத்து ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். அத்துடன் பூண்டு, முந்திரி, தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி, விழுதாக அரைத்தெடுக்கவும்.
 
புளியை ஊற வைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து பிழிந்து, ஒன்றரைக்கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் மீதி எண்ணையை விட்டு சூடானதும் கடுகு போடவும், கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். (வெந்தயம் கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்). பின்னரி அதில் மீதியுள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியதும் தேங்காய் விழுதைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அதில் தக்காளி விழிது, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக எண்ணை பிரியும் வரை வதக்கவும். பின்னர் அதில் புளித்தண்ணீரையும் உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். (தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்).. அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

Popular Post

Tips