ஆத்திச்சூடி

  anpin pala vadivankalil onru nadpu aliyaa chelvankalil onru nadpu.   aalamaana nadpil kalankamillai aankalukkum penkalukkum nadpil paethamillai.   ineya poaluthai kalikka nanpanai thaedunkal ineya karumpai chaernthu kadikka nanparkalidam panku kaelunkal.   eevathum irakkam kolvathum nadpu eenravarukku aduththu nelaiyil iruppathu nadpu.   udaimaikalai pakirnthu kolvathum nanparkalidaththae unmaiyai pakirnthu kolvathum nanparkalidaththae.   oor viddu oor chenraalum … Continue reading "aaththichchoodi"
aaththichchoodi

 

அன்பின் பல வடிவங்களில் ஒன்று நட்பு
அழியா செல்வங்களில் ஒன்று நட்பு.

 

ஆழமான நட்பில் களங்கமில்லை
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நட்பில் பேதமில்லை.

 

இனிய பொழுதை கழிக்க நண்பனை தேடுங்கள்
இனிய கரும்பை சேர்ந்து கடிக்க நண்பர்களிடம் பங்கு கேளுங்கள்.

 

ஈவதும் இறக்கம் கொள்வதும் நட்பு
ஈன்றவருக்கு அடுத்து நிலையில் இருப்பது நட்பு.

 

உடைமைகளை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களிடத்தே
உண்மையை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களிடத்தே.

 

ஊர் விட்டு ஊர் சென்றாலும் மறவாது நட்பு
ஊக்கம் கொடுத்து துணை நிற்பதும் நட்பு.

 

எண்ணங்களை பரிமாறிக் கொள்வது நண்பர்களிடத்தே
எண்ணி பார்க்காமல் செலவு செய்வதும் நண்பர்களிடத்தே.

 

ஏற்றிவிடும் ஏணிகளாய் நண்பர்கள் வாழ வேண்டும்
ஏமாற்றங்களை தாங்கும் ஞானிகளாய் நண்பர்கள் வாழ வேண்டும்.

 

ஐயம் கொள்வது நட்பிற்கு அழகல்ல
ஐயம் கொண்டு நண்பனை வெறுப்பது பண்பல்ல.

 

ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பது நட்பு
ஒற்றுமையை கற்றுக் கொடுப்பது நட்பு.

 

ஓய்வின்றி பேசி மகிழ்பவனும் நண்பன்தான்
ஓய்வு கொண்டு இதயம் நின்றதைப் பார்த்து அழுபவனும் நண்பன்தான்.

 

ஓளவை கொடுத்தாள் அதிவமானுக்கு அதிசய நெல்லிக்கனி நட்பின் இலக்கணமாக
ஒளடதம் சாப்பிட்டும் குறையாத நோய் அதிசயமாய் குறைந்தது
நண்பனை கண்டதும் நட்பின் இனிய மருந்தாக.

 

ஃ என்பது ஆயுதம் , முயறாய்தம் என்பர்
அன்பு பாசம் பண்பு என்று முற்றாய்தமாய் முத்தாய்ப்பாய் வாழ்வது நட்பு என்பர்.

Popular Post

Tips