ஆட்டிறைச்சி புளிக்குழம்பு

  thaevaiyaana poarudkal :   aaddiraichchi – 1/2 kiloa puli – chiriya elumichchai alavu kaththarikkaay – 1/4 kiloa venkaayam – periyathu 2 ijchi poondu viluthu – 2 thaekkarandi milakaayththool – 1 maechaikkarandi malliththool – 1 thaekkarandi majchaththool – 1/2 thaekkarandi milaku cheerakaththool – 1/2 thaekkarandi choampu – 1/2 thaekkarandi kaayntha milakaay – 4 karivaeppillai – … Continue reading "aaddiraichchi pulikkulampu"
aaddiraichchi pulikkulampu

 

தேவையான பொருட்கள் :
 
ஆட்டிறைச்சி – 1/2 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கத்தரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – பெரியது 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பில்லை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
 
செய்முறை :
 
1. ஆட்டிறைச்சியை சிறு சிறுத்துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து அதில் மஞ்சத்தூள், கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.
2. புளியை தண்ணீரில் கரைக்கவும்.
3. கத்தரிக்காயை சிறுத்துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
4. சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும்.
5. வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும், வேகவைத்த இறைச்சியைக் கொட்டி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
6. கத்தரிக்காயை போட்டு எல்லா தூள்களையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீர், மற்றும் ஆட்டிறைச்சி வெந்த சூப்பையும் ஊற்றவும்.
7. குழம்பு கெட்டியானதும் இறக்கவும். ஆட்டிறைச்சி புளிக்குழம்பு ம்ம்ம்ம்ம்.. ரெடி…

Popular Post

Tips