பருக்கள் மறைய……………..

* panneer roja moaddukkalai eduththu, athu moolkum alavu choodaana thanneer viddu, oru mane naeram oora vaikkavum. pin antha neerai vadikaddi mukaththil poochi arai mane naeram ooriya pin thudaiththu edukkavum. ivvaaru cheythal parukkal naaladaivil maraiyum.   * chanthanak kaddaiyai panneer viddu kulaiththu mukaththil thadavi vanthaal, parukkalinaal aerpadda vadukkal naaladaivil maraiyum.   *thinamum udarpayirchi cheyya vaendum. avvaaru … Continue reading "parukkal maraiya…………….."
parukkal maraiya……………..

* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது மூழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்தல் பருக்கள் நாளடைவில் மறையும்.

 

* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு குழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.

 

*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

 

*ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும். பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.

 

* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக் கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.

 

* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.

 

* ஒரு ஸ்பூன் அறுகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.

Popular Post

Tips