கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர…

  karumaiyaana neela koonthalai virumpaatha pen intha ulakaththil vaalvatharku chaaththiyamillai! koonthal neelamaakavum adarththiyaakavum karumaiyaakavum valara thavam kidakkum penkalukkaaka intha chiriya kurippukkal…   * viddamin 'pi' kuraipaaddinaal viraivil thalaimayir venmaiyaaka aarampikkum. ooddachchaththulla unavukal intha kuraipaaddai neekkum.   * nellik kaayaiyum, oora vaiththa venthayaththaiyum nanraaka araiththu antha viluthaith thalaiyil thadavi oora vaippathu kulirchchiyaith tharum. kan erichchalaip poakkum. … Continue reading "koonthal neelamaakavum adarththiyaakavum karumaiyaakavum valara…"
koonthal neelamaakavum adarththiyaakavum karumaiyaakavum valara…

 

கருமையான நீள கூந்தலை விரும்பாத பெண் இந்த உலகத்தில் வாழ்வதற்கு சாத்தியமில்லை! கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த சிறிய குறிப்புக்கள்…
 
* விட்டமின் 'பி' குறைபாட்டினால் விரைவில் தலைமயிர் வெண்மையாக ஆரம்பிக்கும். ஊட்டச்சத்துள்ள உணவுகள் இந்த குறைபாட்டை நீக்கும்.
 
* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.
 
* மயிர் எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
 
* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது வெந்நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக அழுத்தவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இதுவே.
 
* இரண்டு கரண்டி வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் 15 நிமிடங்கள் ஊறவிடவும். இதை நன்றாக நுனிமயிரில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விட்டால் பொடுகு நீங்கிவிடும்.
 
* நீங்கள் உபயோகிக்கும் ஷம்போவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டாது.
 
* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.
 
* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கிண்ணத்தில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
 
* நல்ல மரச் சீப்பின் மூலம் அழுத்தி வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
 
* விளக்கெண்ணெய் இரண்டு மேசைக் கரண்டி. தேங்காய் எண்ணைய் ஒரு மேசைக் கரண்டி எடுத்து இலேசாகச் சுடவைத்து உள்மயிரில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷம்போ போட்டு அலசி விட்டால் மயிர் உதிராமல் இருக்கும்
 
* கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்துத் முழுகவும்.
 
* அங்கங்கே தலையில் சிறு இடைவெளிகள் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.
 
* தலை மயிருக்கு போஷாக்குத் தரும் ஷம்போவை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு துண்டு சீயக்காய், வெந்தயம் சிறு துண்டு, பச்சைப்பயறு சிறிதளவு, புங்கங்காய் சிறிதளவு எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இரசாயனப் பொருட்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. மயிரும் நன்றாக வளரும்.
 
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
 
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.
 
* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
 
* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது ஒடிகலோன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக அழுத்தவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

Popular Post

Tips