நினைவஞ்சலி

nenaivoduthaan neruththi vaiththaen kanavodu neeyum kalainthathenna..? … kankalil kalanthu Kadhalaay pukunthu manathinel vanthu malarnthavalae..! ennanpae..! vaalntha kaalam un nelaloadu, kaanal neeraayp poakuthadi, meethikkaalam nenaivodu vaalvatheppadi..? chollumadi……   ennuyirae…! un madimeethu thalaivaiththu naan madiya varam kaeddaen… neeyoa.. maarpu meethu mukamchaayththu nee madintha maayamenna?   kannemaikkaamal unnaip paarththaen kaalan vanthathu theriyalliyae… kadaichivarai inri kainaluvip poana maayamthaan puriyalliyae… … Continue reading "nenaivajchali"
nenaivajchali

நினைவோடுதான் நிறுத்தி வைத்தேன்
கனவோடு நீயும் கலைந்ததென்ன..?


...


கண்களில் கலந்து
காதலாய் புகுந்து
மனதினில் வந்து மலர்ந்தவளே..!
என்னன்பே..!
வாழ்ந்த காலம்
உன் நிழலோடு,
கானல் நீராய்ப் போகுதடி,
மீதிக்காலம்
நினைவோடு வாழ்வதெப்படி..?
சொல்லுமடி......

 

என்னுயிரே...!
உன் மடிமீது தலைவைத்து
நான் மடிய வரம் கேட்டேன்...
நீயோ..
மார்பு மீது முகம்சாய்த்து
நீ மடிந்த மாயமென்ன?

 

கண்ணிமைக்காமல் உன்னைப் பார்த்தேன்
காலன் வந்தது தெரியல்லியே...
கடைசிவரை இன்றி
கைநழுவிப் போன
மாயம்தான் புரியல்லியே...

 

அன்பே..!
உன்னைப் பிரிந்த என் விழிகள்
மலையருவியாய் வடிகின்றது,
மனதில் உந்தன் நினைவுகள்
ஓயாமல் உதிக்கின்றது.
பெண்ணே..!
உயிரற்ற சடலம்
உலாவருகின்றது உணர்விழந்து,
உயிரிருந்தும் முடியவில்லையே
உன்னை நானிழந்து.

 

சந்தோசங்கள் குறைந்ததில்லை,
சண்டையிட்டுப் பிரிந்ததில்லை,
சந்தேக வாழ்க்கைக்கு
சாட்சியாக வாழ்ந்ததில்லை.
பிரியமாய் இருந்தவளே..!
பிரிந்து நீ சென்றதினால்
பிஞ்சு மனம்
பற்றி எரிகின்றது.

 

தேடி வருவதற்கு
முகவரி தெரியவில்லை,
தெருவோர நாயாக
தினமும் உலா வருகின்றேன்.
தனித்து வாழ முடியவில்லை,
தனிமைப் படுத்தி சென்று விட்டாய்,
நீ தந்த சுகத்தோடு
தனியாகப் புலம்ப விட்டாய்.

 

நானோ புலம்பியபடி வாழ்கின்றேன்........

 

***மரணம் வந்தாலும்
மறக்காத மனம் வேண்டும்
மீண்டும் ஜெனனமென்றால்
நீயே என்
மனைவியாக வரவேண்டும்***

இதயப்ரியன்

Popular Post

Tips