கோதுமை மாவு பிஸ்கட்

  thaevaiyaana poarudkal   koathumai maavu – 1 koappai charkkarai – 1/4 koappai ney – 2 maejaik karandi kaechari kalar – chirithalavu kunkumappoo – chirithalavu venelaa echans – chila thulikal enney – thaevaiyaana alavu   cheymurai   1. koathumai maavai chaliththu ney chaerththu kaiyaal orae cheeraaka nanku picharavum.   2. charkkaraiyudan chirithu thanneer chaerththu choodaakki … Continue reading "koathumai maavu piskad"
koathumai maavu piskad

 

தேவையான பொருட்கள்
 
கோதுமை மாவு – 1 கோப்பை
சர்க்கரை – 1/4 கோப்பை
நெய் – 2 மேஜைக் கரண்டி
கேசரி கலர் – சிறிதளவு
குங்குமப்பூ – சிறிதளவு
வெனிலா எசன்ஸ் – சில துளிகள்
எண்ணெய் – தேவையான அளவு
 
செய்முறை
 
1. கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும்.
 
2. சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும்.
 
3. பின்னர் அதில் குங்குமப்பூ சேர்த்து ஆறவிடவும்.
 
4. சர்க்கரைப் பாகு ஆறியதும், சில துளிகள் வெனிலா எசன்ஸ், கேசரி கலர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 
5. பின்னர் கோதுமை மாவுடன் சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும்.
 
6. பிசைந்த மாவை 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தி போல உருட்டி, பின்னர் அதை டைமண்ட் வடிவிலோ அல்லது சிறு பாட்டில் மூடியைப் பயன்படுத்தி வட்ட வடிவிலோ வெட்டவும்.
 
7. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
 
குறிப்பு
 
1. இந்த பிஸ்கட்டுகளை தனியாகவும் சாப்பிடலாம், மிக்சர் வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
 
2. பிஸ்கட் மாவை 2 அல்லது 3 பகுதிகளாகப் பிரித்து, வேறு வேறு கலர்களைச் சேர்த்து பிஸ்கட் செய்து, மிக்சர் வகைகளுடன் சேர்த்தால், பார்க்க அழகாக இருக்கும்.

Popular Post

Tips