நட்பு கவிதை

kallooriyil emaiyaanda raajakkal kaalamathu. avarkalukku naam vidda dimikkaakkal palavitham. chollil adankaatha chinthanaich chirippukkal avai. kaav (Half time) raimodu kalavaaka veeduchenra naadkal, rippoaddil( Report) poadda nanpanen thirudduk kaiyeluththu, maechaiyil eluthappaddiruntha nanpiyin aliyaatha peyar. atharkaay vaankikkaddiya pirampadikal. aththanaiyum chiththappiramaiyaay thiththiththatheppadi?… vidaikaana mudiyaatha vaalipaloakam athu.   chaevis kilap, antha chaikkil paak, chenjons ampulans, mathil maelirunthu paarkkum kirikkad mech, … Continue reading "nadpu kavithai"
nadpu kavithai

கல்லூரியில் எமையாண்ட ராஜாக்கள் காலமது.
அவர்களுக்கு நாம் விட்ட டிமிக்காக்கள் பலவிதம்.
சொல்லில் அடங்காத சிந்தனைச் சிரிப்புக்கள் அவை.
காவ் (Half time) ரைமோடு களவாக வீடுசென்ற நாட்கள்,
ரிப்போட்டில்( Report) போட்ட நண்பனின் திருட்டுக் கையெழுத்து,
மேசையில் எழுதப்பட்டிருந்த நண்பியின் அழியாத பெயர்.
அதற்காய் வாங்கிக்கட்டிய பிரம்படிகள்.
அத்தனையும் சித்தப்பிரமையாய் தித்தித்ததெப்படி?...
விடைகான முடியாத வாலிபலோகம் அது.

 

சேவிஸ் கிளப், அந்த சைக்கிள் பாக்,
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், மதில் மேலிருந்து பார்க்கும்
கிரிக்கட் மெச், பாதி மீதியாய்ப் பகிர்ந்துண்ணும்
உப்புத்தூள் மாங்காயும் கடலை வடையும்
கற்பனைக்குள் அடங்காத அத்தனை சொர்க்கம்.

 

பரீட்சைக்காலத்தில் உறங்காத இரவுகள்,
நண்பிகளோடு செய்த பந்தயங்கள்,
கால் புள்ளிக்கூட கணக்குப் பார்த்த காலங்கள்.
அத்தனை கெட்டிக்காரர்களும் கெட்டிக்காரிகளும்
ஒன்றாய் இருந்த வகுப்பறைகள். - இப்போ.....

 

திக்கொன்று திசையொன்றாய்
எட்டமுடியா தூரங்களில் ஒருபுறம்.
களங்களில் ஆடி காவியமான வீரர்களாய் மறுபுறம்.
அவர்களுக்காய் ஒரு கணம் தலைகுனிந்து மௌனமாகி
தொடர்வோம் வாழ்க்கையின் படிகளை.

Popular Post

Tips