மொழித்தெரிவு :
தமிழ்
English

சாமுத்திரிக லட்சணம்

Wed, 8 May 2013 21:11:30

chaamuththirika ladchanam oruvarin anka adaiyaalankalai vaiththae avarin kunam marrum cheyalpaadukalai chollum kalaikku chaamuththirika lachchanam enru peyar. ithu oru palamaiyaana kalaiyaakum. inkae penkalin kunaththai chollum oru pakuthiyai paarppoam.

சாமுத்திரிக லட்சணம்
UP Date
24

ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்தே அவரின் குணம் மற்றும் செயல்பாடுகளை சொல்லும் கலைக்கு சாமுத்திரிக லச்சணம் என்று பெயர். இது ஒரு பழமையான கலையாகும். இங்கே பெண்களின் குணத்தை சொல்லும் ஒரு பகுதியை பார்ப்போம்.

பெண்ணின் கழுத்து இளைத்து சிறியதாக இருந்தால் அவர் முன்கோபியாக இருப்பார்.

பெண்ணின் கழுத்து உயரத்திற்கு ஏற்ற மாதிரி இல்லாமல் இருந்தால் எப்பொதும் கவலை பட்டுக்கொண்டே இருப்பார்கள். கவலையே இல்லாமல் இருந்தாலும் காரணம் கண்டு பிடித்தாவது கவலை படுவார்கள்.

கழுத்து பகுதி மிக குறிகியதாக இருந்தால் இளமையில் விதவையாவார். வாலிபத்தில் வாழ்க்கை பறிபோகும்.

கழுத்து பகுதி மிக நீளமாக இருந்தால் ஒழுக்க குறைபாடு உள்ளவர். நடத்தை சரி இல்லாமல் இருப்பார்கள். கட்டிய கணவனுக்கு துரோகம் செய்வார்கள்.

முகவாய் வட்டமாகவும், சதைபிடிப்பாகவும் , ரோமங்கள் இல்லாமலும், வடுக்கள் இல்லாமலும் இருந்தால் நல்ல யோகமுல்லவர். வாழ்நாள் முழுவதும் வசதி குறையாமல் வாழ்க்கை அமையும். தொட்டது துலங்கும்.

வாய் பகுதி அகலமாக இருந்தால் நம்பிக்கை குறைவானவர். நம்பிக்கை மோசடி செய்வார். இவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க முடியாது. மண் குதிரையை நம்பி ஆற்றீல் இறங்கிய கதையாக போய்விடும்.

முகவாய் சதை பிடிப்பில்லாமல் மெல்லிய ரோமங்கள் இருந்தால் தீய செயல்கள் செய்வார். சண்டைக்காரி என்று பெயர் எடுப்பார்.

கன்னம் வட்டமாக சதை பிடிப்பாக இருந்தால் எதையும் திட்டமிட்டு செய்வார்கள். அமைதியானவர். அன்பானவர். நம்பிக்கைக்கு உரியவர்.

கன்னத்தில் ரோமங்கள் இருந்து, தட்டையாக சதை பிடிப்பு இல்லாமல் இருந்தால் எதையும் சிந்திக்காமல் செயல்படும் குணம் உள்ளவர்.

முகம் நல்ல வெளுப்பாகவும், கண்கள் நல்ல பால் வண்ண நிறத்திலும். வசீகரமான பார்வையும் இருந்தால் பாக்கியசாலிகள் எனலாம். வாழ்க்கை சிறப்பாக அமையும். நிலையான செல்வ சிறப்பை பெறுவார்கள். கணவனின் அன்புக்கு பாத்திரமாக அன்னோன்னிய தம்பதியாக வாழ்வார்கள்.

வாய் சதுரமாக இருந்தால் பிறரை பழிவாங்கும் எண்ணம் கொண்டவராக இருப்பார்கள்.

வாய் பெரியதாக இருந்தால் நம்ப முடியாத குணம் உடையவராக இருப்பார். எப்போது காலை வாருவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் மிகவும் கவனமாக பழக வேண்டும்.

வாய் சிறியதாக. அழகான உதடுகளை பெற்றிருந்தால் அன்பானவர். அதிஷ்ட்டம் நிறைத்தவர். கணவனுக்கு பிடித்த மனைவியாக திகழ்வார்கள்.

கீழ் உதடு தடித்து பெரியதாக இருந்தால், முன் கோபம், முன் எச்சரிக்கை இல்லாமல் செயல் படுவது, எடுத்து எறிந்து பேசும் குணம், பிடிவாத போக்கு உடையவர். காம சிந்தனை அதிகம் உள்ளவர்.

உதடுகள் சிவந்து பவழம் போன்று இருந்தால், அட்டகாசமான வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரிய நிலையில் செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.

உதடுகள் கருப்பாகவும் அழகில்லாமலும் இருந்தால், இளமையில் வதவையாவார். உறவுகள் பகையாகும். வாழ்கையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டிவரும்.

மேல் உதடும், கீழ் உதடும் ஒரே அளவாக இருந்தால் பணக்காரி என்று பெயரெடுப்பார்.

சாதாரண நிலையில் உதடுகள் இரண்டும் ஒட்டாமல் இருந்தால், நம்ப முடியாதவர், நம்பிக்கை துரோகம் செய்வார்.

மேல் உதட்டில் ரோமம்கள் நிறைத்து இருந்தால் கணவனுக்கு கட்டு படாதவர். தன்னிச்சையாக செயல் படுவார். சுதந்தர பிரியர். எதற்கும் துணிந்தவர்.

பற்கள் வெண்மையாக அழகாக ஒரே வரிசையாக இருந்தால் பெரும் பாக்கியசாலி என்றே சொல்லலாம். உதடுகள் ரோஜா நிறத்திலும். வில் போன்ற அமைப்பிலும் இருந்தால் வாழ்க்கை வளமாக அமையும். வசதி வாய்ப்புகள் பெருகும். மனதில் சந்தோசம் அதிகரிக்கும், மிகவும் பொருத்தமான கணவரை அடைவார்கள்.

பல்வரிசை சரியாக அமையாமல் இருந்தால், பிடிவாத குணம் பெற்றிருப்பார். விட்டு கொடுக்கும் குணம் சுட்டு போட்டாலும் வராது. பல் ஈறுகள் கருப்பாக இருந்தால் திருட்டு குணம் உள்ளவர். திருடுவார்.

முன் பற்கள் மட்டும் பெரியதாக இருந்தால் யோகம். ஆனால் மத்திம வயதில் இல்லறத்தை இழக்க வேண்டிவரும்.

பற்கள் மஞ்சள் நிறமாகவும், கருப்பாகவும் இருந்தால் உடல் உறவில் தணியாத தாகம் உள்ளவர்.

பற்கள் பெரிதும் சின்னதுமாக ஒழுங்கு இல்லாமல் இருந்தால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிவரும்.


மேலும் ஆன்மிகம்

Tags : சாமுத்திரிக, லட்சணம், சாமுத்திரிக லட்சணம், chaamuththirika ladchanam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]