மொழித்தெரிவு :
தமிழ்
English

தலைமுடி கொட்டுகிறதா? என்ன காரணம்?

Fri, 10 May 2013 21:32:10

thalaimudi koddukirathaa? enna kaaranam? thane manetha vaalvil alakaik kodukkum vidayam onru undaenraal athu thalaimudithaan. udalin neram ethuvaaka irunthaalum thalaiyil athika mudiyudan chiluppikkondu chellum alakae thanethaan.

தலைமுடி கொட்டுகிறதா? என்ன காரணம்?
29

தனி மனித வாழ்வில் அழகைக் கொடுக்கும் விடயம் ஒன்று உண்டென்றால் அது தலைமுடிதான். உடலின் நிறம் எதுவாக இருந்தாலும் தலையில் அதிக முடியுடன் சிலுப்பிக்கொண்டு செல்லும் அழகே தனிதான்.

அது ஆண்களாகட்டும் பெண்களாகட்டும். அடர்த்தியான தலைமுடிதான் அழகைத் தரும். அடர்த்தியாக தலைமுடி கொண்டவர்களின் முகத்தோற்றமே ஒரு வசீகரத்தை ஏற்படுத்தும்.

முகத்தோற்றத்தை தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக முடி விளங்குகிறது. இவ்வளவு பெருமை மிக்க தலைமுடி ஒரு சிலருக்கு அதிகம் கொட்டும். ஒரு சிலருக்கு இலேசாக முடிகொட்டும். முடிக்கொடுவதற்கு என்ன காரணம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இன்றைய பெரும்பாலான இளைஞர்கள், யுவதிகளின் மத்தியில் முடி பராமரிப்பு என்பது இல்லையென்றே சொல்லலாம். காரணம் அவசர உலகம்... கண்ட கண்ட விளம்பரங்களில் வரும் ஷேம்பு வகைகள், ஹேர் லோஷன்கள், ஹேர் ஜெல்கள்தான்.

இயற்கையான முறையில் கூந்தலை பராமரிக்க அவர்களுக்கு நேரமுமில்லை..

இதுமட்டும்தான் முடி கொட்டுவதற்கு காரணமா? இன்னும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று பார்ப்போம்.

முடிகொட்டுவதற்கான காரணங்கள்: (Reasons for Hair Falling )

பரம்பரை: (Descent)

வழி வழியாக பரம்பரை மூலம் வருவது. உடலில் உள்ள மரபு ஜீன்கள் மூலம் முடிகொட்டும் பிரச்னை தொடரும். இதை தடுக்க முடியாது. என்றாலும் முடிகொட்டுவதை மிக குறைந்த அளவாக குறைக்க முடியும்.

ஹேர்ஸ்டைல்: (Hairstyle:)

நீங்கள் அழகு நிலையங்களில் உங்கள் கூந்தலுக்கு சாயமேற்றுதல், சுருள் முடியாக்குதல், கூந்தலை நேராக்குதல் போன்றவைகளை அடிக்கடி செய்பவரா நீங்கள்? அப்படியெனில் வெகு விரைவில் நீங்கள் உங்கள் தலைமுடியை இழக்க வேண்டியதுதான்.

இதனால் கூந்தலில் உலர்வுத் தன்மை ஏற்பட்டு கூந்தல் உதிர்வது அதிகரிக்கும்.

ஹார்மோன் : (Hormone)

வழக்கத்துக்கு மாறான ஹார்மோன் மாற்றங்களால் முடி உதிர்வு ஏற்படும். பிரசவ காலங்களில் பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னை இருக்கும். இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் நிகழும். தைராய்டு பிரச்னையால் முடிகொட்டும்.

இராசயனங்கள்: (Chemicals:)

வேதிப் பொருட்களால் முடி கொட்டும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இது அதிகமாக இருக்கும். காரணம் இராசயணம், வேதிப்பொருட்களால் உடல் அதிக வெப்பமடைவதோடு, தலை முடியும் தனது வேர்கால்களின் வலுவை இழக்கிறது.

மேலும் தற்காலத்தில் பயன்படுத்தும் அனைத்து ஷாம்பு வகைகள், கண்டீஷனர் வகைகளாலும் தலைமுடி பாதிக்கப்பட்டு கொட்ட ஆரம்பிக்கிறது.

உணவு வகைகள்: (Cuisine types:)

பாக்கெட் உணவு வகைகள் எடுத்துக்கொள்பவர்கள் முடி கொட்டும் பிரச்னை அதிகம் இருக்கும். காரணம் இவர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும இந்த பாக்கெட் உணவு வகைகளில் கிடைப்பதில்லை. அதனால் முடிகொட்டும் பிரச்னை ஏற்படும்.

சுற்றுப்புறச்சூழ்நிலை, வெப்பம்; (The environment, heat;)

சுற்றுப்புறச்சூழ்நிலைகளாலும் (தூசிகள், அழுக்குகள்), வெப்பம் மிகுந்த வானிலையாலும் தலைமுடி அதிக வெப்பமடைந்து சிதைவுற்று, உடையும் தன்மை ஏற்படும். இதனாலும் அதிகமாக முடிகொட்டும் பிரச்னை ஏற்படும்.

ஆண்கள்: Hair loss for men

பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் முடி கொட்டுகிறது. காரணம் இயற்கையான உடலமைப்பு மற்றும் ஹார்மோன் விகிதங்கள் மாறுபாடு.

தூக்கமின்மை: (Insomnia)

சாதாரணமாகவே தூக்கமின்மையால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும். சீரற்ற தூக்கம், அதிக தூக்கம், போதுமான அளவு தூக்கமில்லாமலை ஆகிய காரணங்கள் முடிகொட்டும். சீரற்ற தூக்கத்தின் வெளிப்பாடாக முடிகள் அதிக அளவு கொட்டத்தொடங்கும். விரைவில் வழுக்கை தலையாக மாறிவிடும்.

மருந்துகள், மாத்திரைகள்: (Medicines, tablets:)

உடல் நோய்களைத் தீர்க்க எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளில் முக்கியமானது முடி கொட்டுதல். எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் வீரியத்தைப் பொறுத்து முடிகொட்டும் பிரச்னை இருக்கும்.

மன அழுத்தம்: (Mental stress:)

உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தாலும், மன ரீதியாக அதிக உளைச்சல், மன அழுத்தம் ஆகியவைகளால் முடி கொட்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்
முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்? இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் அழகு குறிப்பு

Tags : தலைமுடி, கொட்டுகிறதா, என்ன, காரணம், தலைமுடி கொட்டுகிறதா? என்ன காரணம்?, thalaimudi koddukirathaa? enna kaaranam?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]